அரசு செலவில் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம். முதல்வர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,August 26 2015]

தமிழ் திரையுலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தாதா சாகேப் பால்கே என்ற உயரிய விருது பெற்று தமிழர்களுக்கும் தமிழ் திரையுலகிற்கும் பெருமை சேர்த்த சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என அவருடைய ரசிகர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் பல நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தமிழக அரசு இடம் ஒதுக்கி தந்திருந்தபோதிலும், மணி மண்டபத்தின் பணிகள் இதுவரை தொடங்காமல் இருந்தது.


இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில், மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்தபோது, "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டுமென பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்று சிவாஜி கணேசன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும்" என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழ் திரையுலகினர்களுக்கே ஒரு இனிப்பான செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சன்னிலியோனை பின்னுக்கு தள்ளிய ரஜினி நாயகி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படமான 'கபாலி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகை ராதிகா ஆப்தே...

சென்னை மருத்துவமனையில் அஜீத் படப்பிடிப்பு

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். கடந்த திங்கள்...

கேரள விஜய் ரசிகர்களுக்கு 'புலி' தரும் ஓணம் விருந்து

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பதை அதன் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பில்...

விஷாலுடன் இணையும் சிவகார்த்திகேயன்?

பூஜை, ஆம்பள படங்களை அடுத்து விஷால் தனது 'பாயும் புலி' படத்தை வரும் செப்டம்பர் 4ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் செய்கிறார்...

எம்.ராஜேஷின் அடுத்த பட டைட்டில்?

இயக்குனர் எம்.ராஜேஷ் படங்களுக்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் எப்போதுமே ஒரு தொடர்பு இருக்கும்....