ஓபிஎஸ்-ஐ சந்தித்த ஜெயலலிதாவின் உயிர்த்தோழி

  • IndiaGlitz, [Thursday,February 09 2017]

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழியும், தமிழ்நாடு இசை பல்கலைக்கழக துணைவேந்தருமான வீணை காயத்ரி சற்று முன் சந்தித்து பேசினார். இதுவொரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது.
அதேபோல் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அவர்களும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வருகை தந்து தனது ஆதரவை நேரில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் ஓபிஎஸ் அவர்களின் கை ஓங்கி வருவதாக அனைத்து தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது.

More News

சசிகலா நடவடிக்கைக்க்கு எதிர்ப்பு. கூண்டோடு ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகிகள்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அணி, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அணி என இரண்டு அணிகளாக அதிமுக தற்போது செயல்பட்டு வருகிறது. யார் ஆட்சியை பிடிப்பது என்ற பரபரப்பு தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒம்சக்தி சேகர் அதிமுகவின் அட&#

ஜெயலலிதா நினைவு இல்லம் ஆகிறது 'வேதா இல்லம்'. விரைவில் அறிவிப்பு?

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கடந்த இரண்டு நாட்களாகவே பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன், அதிமுக வங்கிக்கணக்கு முடக்கம் ஆகியவை எதிர்த்தரப்பினர் கூட எதிராபாத அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது...

மும்பையில் இருந்து கிளம்பினார் ஆளுனர். சென்னை விமான நிலையத்தில் முதல்வருடன் சந்திப்பா?

தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னைக்கு சற்று முன்னர் கிளம்பினார். அவர் இன்று பிற்பகல் 3மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

ஓபிஎஸ்-க்கு எதிராக போயஸ் கார்டனில் ஆர்ப்பாட்டம். உருவ பொம்மை எரிக்க முயற்சி

சென்னை மெரீனாவில் தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தனது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்திய வினாடியில் இருந்து தமிழக அரசியல் சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்டது. ஆட்சியை பிடிக்க சசிகலா தலைமையில் ஒரு அணியும், முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் தீவிர முயற்சியில் உள்ளனர்...

கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் அமளி. இரு அவைகளும் ஒத்திவைப்பு

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் வகையில் உடனடியாக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர்ராவ், தமிழகம் திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமளி செய்து வருகின்றனர்...