கொடநாடு கொலை வழக்கில் தேடப்பட்ட மற்றொரு நபருக்கும் விபத்து.

  • IndiaGlitz, [Saturday,April 29 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவின் காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் சிக்கி பலியானதை சற்று முன்னர் பார்த்தோம்.

இந்த விபத்து திட்டமிடப்பட்ட கொலையா? அல்லது எதிர்பாராமல் நடந்த விபத்தா? என போலீஸார் விசாரணை செய்து வரும் நிலையில் இதே வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொருவரும் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர்களில் கேரளாவை சேர்ந்த சயான் என்பவரும் ஒருவர். இவர் சற்று முன்னர் கேரள மாநிலம் பாலக்காடு அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். அவருடன் சென்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கொடநாடு கொலை வழக்கில் தேடப்படுபவர்கள் அடுத்தடுத்து சாலை விபத்தில் சிக்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

அஜித்தின் 46வது பிறந்த நாள்: 46 அபூர்வ தகவல்கள்

அஜித்! இந்த ஒற்றை சொல்லுக்கு இருக்கும் சக்தி அளப்பறியது.

கொடநாடு கொலை வழக்கில் திடீர் திருப்பம். தேடப்பட்ட ஜெ.வின் கார் டிரைவர் மர்ம மரணம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை ஐந்து தனிப்படைகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்...

பிரபல நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவர் கைது

கவுதம் கார்த்திக் நடித்த 'இந்திரஜித்' என்ற படத்தின் நாயகியும் இந்தி சீரியல் ஒன்றில் பார்வதி தேவியாகவும் நடித்து வருபவர் பிரபல நடிகை சோனாரிகா படோரியா. இவருக்கு மர்ம நபர் ஒருவர் கடந்த ஒரு வருடமாக செல்போனில் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்...

அட்ரஸ் தேடி போய் அடிப்பேன். சமுத்திரக்கனியின் ஆவேசம் ஏன்?

பிரபல இயக்குனர், நடிகர், சமுத்திரக்கனி சமூகநல அக்கறையுடன் படம் இயக்கும் இயக்குனர்களில் ஒருவர். அவரது 'அப்பா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து வரும் மே 5ல் 'தொண்டன்' ரிலீஸ் ஆகவுள்ளது...

பாகுபலி 2' படத்தின் மலைக்க வைக்கும் முதல் நாள் சென்னை வசூல் : ரஜினி, விஜய் படங்களுக்கு அடுத்த இடத்தில் 'பாகுபலி 2'

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிய 'பாகுபலி 2'