ஜெயலலிதாவிடம் பாராட்டு பெற்ற சிற்பிக்கு குவியும் சிலை ஆர்டர்கள்

  • IndiaGlitz, [Thursday,December 22 2016]

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சிற்பி ஒருவர் செய்த பல சிலைகளை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்ததோடு, அவரது சிலை அமைப்பையும் பலமுறை பாராட்டியுள்ளார். இவ்வாறு ஜெயலலிதாவிடம் பாராட்டு பெற்ற சிற்பிக்கு தற்போது ஜெயலலிதாவின் சிலையை செய்ய ஆர்டர்கள் குவிந்து வருகிறது.

கடந்த 5ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அவருடைய சிலையை தமிழகத்தின் பல பகுதிகளில் வைக்க அதிமுக தொண்டர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக அவருக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து குறிப்பாக குடியாத்தம், பொள்ளாச்சி, மணப்பாறை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து ஜெயலலிதா சிலைகள் செய்ய ஆர்டர்கள் வந்துவண்ண உள்ளதாம்.

சமீபத்தில் புதுச்சேரி மாநிலம், திருக்கனூரில் ஏழு அடி உயரமுடைய ஜெயலலிதா உருவச்சிலை வைக்கப்பட்டது. இந்த சிலையை செய்தது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது., இவர் வடிவமைத்த 20க்கும் மேற்பட்ட எம்ஜிஆர் சிலைகள் தர்மபுரி மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ளதாம். தமிழகம் முழுவதும் இவர் செய்த 30 சிலைகளை ஜெயலலிதாவே தனது கையால் திறந்துவைத்துள்ளாராம். இதுவரை எம்.ஜி.ஆர் சிலைகள் செய்வதற்கு மட்டுமே ஆர்டர்கள் அதிகளவு வந்ததாகவும் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஜெயலலிதா சிலைகள் செய்யவும் அதிகளவு ஆர்டர்கள் வந்து கொண்டிருப்பதாகவும், அவற்றை செய்வதில் முழுமூச்சுடன் பணிபுரிந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.