close
Choose your channels

18 மொழிகளில் ரிலீஸ், ஏ.ஆர்.ரஹ்மான் இசை.. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜெயம் ரவி திரைப்படம்..!

Wednesday, March 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த திரைப்படம் 18 மொழிகளில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயம் ரவி நடித்த ’அகிலன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் ’பொன்னியின் செல்வன் 2’ படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் 32 வது திரைப்படத்தை தமிழ் திரைப்பட நிறுவனம் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 100 கோடி என்றும் கூறப்படுகிறது. இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைக்க இருக்கும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயம் ரவி தற்போது ‘இறைவன்’, ‘சைரன்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.