நாசா விஞ்ஞானியாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகர்!

  • IndiaGlitz, [Thursday,March 19 2020]

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி தனது அடுத்த படத்தில் நாசா விஞ்ஞானியாக நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஜெயம் ரவி நடித்து வரும் 25வது திரைப்படம் ’பூமி’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தை இயக்கி வரும் இயக்குநர் லட்சுமணன் இந்த படத்தில் ஜெயம்ரவி நாசா விஞ்ஞானியாக நடித்துள்ளதாகவும் தமிழகத்தில் உள்ள சொந்த ஊரான தஞ்சாவூருக்கு திரும்பும் அவர் அங்கு விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலை குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் அதன்பின்னர் விவசாயத்தை மீட்டெடுக்க அவர் நடத்தும் போராட்டங்கள் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் வில்லனுக்கும் இடையே நடக்கும் சண்டை காட்சிகள் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வகையில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். டி.இமான் இசையில் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள ’பூமி’ திரைப்படம் வரும் மே 1ம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கொரோனா பாதிப்பு அடைந்தவர்களுக்காக ரூ.7.42 கோடி நிதியுதவி செய்த நட்சத்திர தம்பதி

இந்தியா உள்பட உலகம் முழுவதும் 125 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது 

"ஒரே நேரத்தில் இத்தனை உயிரிழப்புகளை பார்த்ததில்லை".. கதறும் இத்தாலி மருத்துவர்கள்..! #COVID19

"போர் களத்தில் நடந்து செல்வது போல உள்ளது. ஒரே நேரத்தில் இத்தனை இறப்புகளை பார்த்ததில்லை" என மருத்துவர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.   

நிர்பயா பாலியல் குற்றவாளிகளுக்கு நாளை தூக்குத் தண்டனை உறுதி!!! நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டது

தமிழகத்தில் மேலும் ஒருவரை தாக்கிய கொரோனா: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் மிகவும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் சுமார் 150 பேருக்கு மேல் பரவி உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில்

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை: தமிழக அரசுக்கு ரஜினி கோரிக்கை

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.