'தக்லைஃப்' படத்தில் நடந்த தலைகீழ் மாற்றம்.. மறுபடியும் முதல்ல இருந்தா?

  • IndiaGlitz, [Tuesday,April 16 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபல இயக்குனர் மணிரத்னம் இணைந்த ’தக்லைஃப்’ படத்தில் திடீரென ஒரு தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்து கமல்ஹாசன் தேர்தல் பணி காரணமாக தற்காலிகமாக விலகினார் என்றும் தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தாங்கள் கொடுத்த கால்ஷீட்டை ’தக்லைஃப்’ படக்குழுவினர் வீணடித்து விட்டதாக கூறி இந்த படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் விலகி விட்டதாகவும் அவர்களுக்கு பதிலாக சிம்பு மற்றும் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது தேர்தல் பணி கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதை அடுத்து கமல்ஹாசன் மீண்டும் அடுத்த வாரம் முதல் ’தக்லைஃப்’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் மீண்டும் ’தக்லைஃப்’ படத்திற்கு திரும்பி வர இருப்பதாகவும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து அவருக்கு வேற ஒரு கேரக்டர் அளிக்கப்பட உள்ளதாகவும் இதனை அடுத்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், சிம்பு ஆகிய மூவருமே இந்த படத்தில் நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் இருந்து விலகிய நடிகர்களே மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளது தலைகீழ் மாற்றமாக கருதப்பட்டாலும் படக்குழுவினர் தற்போது திருப்தியாக இருப்பதாக கூறப்படுகிறது.

More News

சீக்கிரமே உலக அழகி பட்டத்தை வெல்வேன்-கருப்பு தமிழச்சி சான் ரேச்சல்

ரேச்சல் போன்ற பெண் பல தடைகளை உடைத்து எரிந்து வரும்போது இது போல பல பெண்கள் தனது வாழ்க்கை இலக்கை நோக்கி ஒரு படி முன் செல்ல நல்லதொரு உந்துதலாக இருக்கும்...

சம்மருக்கு இதுதான் சரியான டிரஸ்.. பீச் பேபியாக மாறிய மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் அவர் கடலோர பகுதியில்

முதிர்ந்த வயதில் IVF மூலம் குழந்தை பெற்று கொள்வது ஆபத்தானதா ?

இந்த தொழில்நுட்ப காலத்தில் சாத்தியம் இல்லாத ஒன்றே இல்லை என்பதை உணர்ந்து தோல்வி கண்ட அனைவரும் மீண்டும் IVF முறையை மேற்கொள்ளலாம்...

தேர்தலுக்குப் பின் மீதமுள்ளோருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை: உறுதியளித்த கதிர் ஆனந்த்

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தேர்தல் முடிந்தவுடன் ரூ.1000 உரிமை தொகை இதுவரை கிடைக்காதவர்களுக்கு வழங்கப்படும் என்று உறுதிமொழி அளித்துள்ளார்.

'ஒருத்தரும் உயிரோடு இருக்க மாட்டீங்க, அடிச்சு தூக்கிருவேன்'..  விஷாலின் 'ரத்னம்' டிரைலர்..!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகிய 'ரத்னம்' திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர்