ஜெயம் ரவியின் 'போகன்' சென்னை வசூல் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,February 06 2017]

ஒவ்வொரு வாரமும் சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் குறித்து நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த வார இறுதி நாட்களில் சென்னையின் பாக்ஸ் ஆபீஸ் குறித்து தற்போது பார்ப்போம்
கடந்த வியாழன் அன்று வெளியான ஜெயம் ரவியின் 'போகன்' பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றதை அடுத்து சென்னையில் இந்த படம் கடந்த வார இறுதியில் 19 திரையரங்குகளில் 307 காட்சிகள் திரையிடப்படு ரூ.1,18,01,180 வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படம் பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 5 வரையிலான 4 நாட்களில் சென்னையில் ரூ.1,61,65,850 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவியின் அதிகபட்ச சென்னை ஓப்பனிங் வசூல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பிப்ரவரி 2ல் வெளியான இன்னொரு படமான 'எனக்கு வாய்த்த அடிமைகள் திரைப்படம் சென்னையில் கடந்த வார இறுதியில் 20 திரையரங்குகளில் 183 திரையிடப்பட்டு ரூ.21,70,310 வசூல் செய்துள்ளது. அதுமட்டுமின்றி பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 5 வரையிலான 4 நாட்களில் சென்னையில் ரூ.27,76,530 வசூல் செய்துள்ளது
மேலும் ஜாக்கிசான் நடித்த குங்பூ யோகா' திரைப்படம் கடந்த வார இறுதியில் 15 திரையரங்குகளில் 101 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.16,52,280 வசூல் செய்துள்ளது.

More News

ரசிகர்களிடம் இயக்குனர் ஹரியின் உருக்கமான வேண்டுகோள்

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன் நடித்த 'சி 3' திரைப்படம் வரும் 9ஆம்...

விஷாலுக்கு வில்லன் ஆகிறார் ஆக்சன் கிங்?

ஒருபக்கம் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் பரபரப்பில் இருக்கும் நடிகர் விஷால் இன்னொரு பக்கம் படப்பிடிப்பிலும் பிசியாக உள்ளார்...

'சி 3' தயாரிப்பாளரின் மனு தள்ளுபடி. சென்னை ஐகோர்ட் அதிரடி

சூர்யா நடிப்பில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் ஹரி இயக்கிய 'சி 3' திரைப்படம் வரும் 9ஆம்....

முதல்வர் பதவியில் சசிகலா. அரசியல் தலைவர்களின் ஆதரவும் எதிர்ப்பும்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னர் முதல்வர் பதவியை ஏற்ற ஓ.பன்னீர்செல்வம், வர்தா புயல், ஜல்லிக்கட்டு பிரச்சனை, மத்திய அரசுடன் இணக்கமான சூழ்நிலை, எதிர்க்கட்சிகளுடன் அரவணைப்பு என சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்...

ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது இளையதளபதியின் 'பைரவா'

பொங்கல் விருந்தாக கடந்த மாதம் 12ஆம் தேதி வெளிவந்த இளையதளபதி விஜய்யின் 'பைரவா' திரைப்படம் 25 நாட்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள நிலையில் இந்த படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது...