close
Choose your channels

இதுவரை இல்லாத வித்தியாசமான லுக்.. வேற லெவலில் ஜெயம் ரவி..!

Saturday, February 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்து வரும் ஒரு திரைப்படத்திற்காக இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமான வேற லெவல் லுக்கில் இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி என்பதும் இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி ’சைரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் . அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சைரன்’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

ஜெயம் ரவி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்பதும் ஹோம் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவி இந்த படத்தில் கைதி கேரக்டரிலும், கீர்த்தி சுரேஷ் காவல்துறை அதிகாரியாகவும் நடிப்பதாகவும் அனுபமா பரமேஸ்வரன் இந்த படத்தில் இன்னொரு முக்கிய காலத்தில் நடத்தி வருகிறார் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்காக ஜெயம் ரவி வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நிச்சயம் இந்த லுக் அவரது ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று இந்த படம் அவருக்கு இன்னொரு வெற்றி படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.