close
Choose your channels

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் ஸ்டைலிஷ் கெட்டப்: வைரலாகும் புகைப்படம்!

Saturday, December 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தில் சமீபத்தில் நடித்து முடித்த ஜெயம் ரவி, விரைவில் இந்த படத்திற்காக டப்பிங் பணிகளில் ஈடுபட உள்ளார் என்று செய்திகள் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஜெயம் ரவியின் 28வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது வைரல் ஆனதை எடுத்து அதில் அவர் வித்தியாசமான கெட்டப்பில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த படத்திற்காக ஜெயம் ரவி வித்தியாசமான ஸ்டைலிஷான தாடி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவியின் 28வது படத்தை இயக்குவது இயக்குனர் கல்யாண் என்பதும் இவர் ஏற்கனவே ஜெயம்ரவி நடித்த ’பூலோகம்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாம் சி.எஸ் இசையில் விவேக் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தை ஸ்கிரீன் சீன் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட உள்ளதாக இந்த படமும் பூலோகம் போலவே ஒரு விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படம் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.