முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி கொடுத்த ஜெயம் ரவி குடும்பத்தினர்!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் உள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் திரை உலக பிரபலங்கள் தாராளமாக முதல்வரிடம் நிதி அளித்து வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது ஜெயம்ரவியின் குடும்பத்தினர் சற்றுமுன் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் 10 லட்சம் கொரோனா நிவாரன நிதியாக கொடுத்துள்ளனர்.

ஜெயம் ரவி, அவருடைய சகோதரர் இயக்குனர் மோகன் ராஜா மற்றும் எடிட்டர் மோகன் ஆகியோர் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை கொரோனா நிவாரண நிதிக்காக அளித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தல அஜீத் உள்பட பல திரையுலக பிரபலங்கள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் முதலமைச்சர் நிவாரண நிதியாக அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.