ஒரு விதை போதும், என்னால புது உலகத்தை உருவாக்க முடியும்: ஜெயம் ரவியின் 'பூமி' டிரைலர்

  • IndiaGlitz, [Saturday,December 26 2020]

ஜெயம் ரவி, நிதிஅகர்வால் நடிப்பில் லட்சுமண் இயக்கத்தில் உருவாகிய ‘பூமி’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

விஞ்ஞானி ஒருவர் சொந்த ஊருக்கு வந்து அங்கு விவசாயிகளுக்கு நடக்கும் அநீதிகளுக்கு கண்டு கொதித்தெழுந்து நடத்தும் போராட்டமும், அந்த போராட்டத்தை விவசாயிகளை அடிமையாக வைத்து அவர்களுடைய உழைப்பையும் பூமியையும் திருடும் ஒரு கார்ப்பரேட் வில்லன் அடக்க முயற்சிப்பதும் இறுதியில் வில்லனின் கொட்டத்தை ஹீரோ எப்படி அடக்குகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என இந்த ட்ரெய்லரில் இருந்து தெரியவருகிறது

விஞ்ஞானியாகவும் விவசாயி ஆகவும் மிகவும் ஆவேசமாக ஜெயம் ரவி நடித்துள்ளார். அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் தாய்நாட்டின் பற்று வெளிப்படுகிறது. படம் முழுவதும் ஆவேசமாக நடித்திருந்தாலும் அம்மா செண்டிமெண்ட் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளும் அவருக்கு உண்டு என்பது டிரைலரில் தெரிகிறது. மொத்தத்தில் ஜெயம் ரவிக்கு ஒரு மேலும் ஒரு சூப்பர் ஹிட் படமாக இந்த பூமி இருக்கும் என்று இந்த டிரைலரில் இருந்து தெரிய வருகிறது

இந்த டிரைலரில் இடம்பெற்ற ’உன் மண்ணும் உன் அரசாங்கமும் எனக்கு அடிமை’, ’நீ இந்த உலகத்தை எத்தனை ஆயிரம் உயரத்துல இருந்து பாத்துருப்ப, 7 லட்சம் கிமீ உயரத்துல இருந்து இந்த உலகத்தை பார்த்தவன் நான், எனக்கு இந்த உயரமெல்லாம் பயமில்லை’ மற்றும் ‘நான் தனியா இருக்கும்போதே என்னை உன்னால தடுக்க முடியலை, இப்ப என் மக்களும் என் கூட இருக்காங்க’ போன்ற வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

சிம்புவின் 'மாநாடு' படத்தில் இணைந்த பழம்பெரும் குணச்சித்திர நடிகர்: வைரல் புகைப்படம்!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில்

சென்னை திரும்புவது குறித்து ரஜினி கூறியது என்ன? தொலைபேசியில் பேசிய முக அழகிரி தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே.

மூணு வாரம் தான் இருக்குது: இன்னும் உணர மாட்டேங்குறாங்க: கமல்ஹாசன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிகட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் இன்று 83வது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இன்னும் 17 நாட்களில் முடிவடைய போகிறது

எல்லை மீறிய ரசிகர்கள்: அர்ச்சனா எடுத்த அதிர்ச்சி முடிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய அர்ச்சனா, வீட்டிற்கு வந்து முதல் வாரத்தில் இருந்து அனைத்து எபிசோடுகளையும் பார்த்திருப்பார் என தெரிகிறது. சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றிய

2021 இல் என்ன நடக்கும்??? கொரோனாவை கணித்த பாபா வங்காவின் கருத்து என்ன???

ஒட்டுமொத்த உலகத்திற்கும் 2020 ஆம் ஆண்டு ஒரு கெடுங்காலமாக மாறிவிட்டது. கொரோனா பரவல்