ஜெயம் ரவியின் 'அகிலன்': ஜீ5 ஓடிடியில் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Saturday,April 01 2023]

ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்” தற்போது ZEE5 தளத்தில் தற்போது ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ‘அகிலன்’ திரைப்படம் கடந்த மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை ZEE5 ஓடிடி தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் N.கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில், இந்தத் திரைப்படத்தில் ஜெயம் ரவி அப்பா மற்றும் மகனாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஒரு neo-noir பாணி திரில்லராக உருவாகியிருந்த இப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்தது.

அகிலன், தீய செயல்களில் ஈடுபடும் ஒரு கப்பல் கிரேன் ஆபரேட்டர், இந்தியப் பெருங்கடலின் ஆதிக்கமிக்கவனாக மாற வேண்டுமென்ற முனைப்பில், கடல் சம்பந்தமான அண்டர்வேர்ல்ட் உலகத்தினை கட்டிக் காக்க முயல்கிறான், துறைமுகத்தில் இருப்பதன் மூலம், பரந்தாமன் (ஹரீஷ் பேரடி) என்ற ஒரு முதலாளிக்காக அகிலன் போதைப்பொருள் மற்றும் பிற கடத்தல் பொருட்களை நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் கடத்துகிறான். சிறப்பு அதிகாரி கோகுல் மேத்தாவை (சிராக் ஜானி) தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றி, சந்தர்ப்பம் கிடைக்கும்போது கடுமையான மற்றும் வெறித்தனமான முயற்சிகளை மேற்கொண்டு , ‘இந்தியப் பெருங்கடலின் ராஜா’ என்ற பட்டத்தை வெல்வதற்கு முழு வீச்சில் முயல்கிறான். ஆனால் அவனது ஆச்சரியமான பின்னணிக் கதை வெளிவரும்போது அது அவனது வில்லத்தனமான செயல்களுக்கு வேறொரு புதிய பரிமாணத்தைத் தருகிறது.

Screen Scene Media Entertainment தயாரித்துள்ள இப்படத்தில், பிரியா பவானி ஷங்கர், ஹரிஷ் உத்தமன், தான்யா ரவிச்சந்திரன், சிராக் ஜானி, ஹரீஷ் பெராடி, தருண் அரோரா, மதுசூதன் ராவ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். நடிகர் ஜெயம் ரவி மற்றும் இயக்குநர் கல்யாணகிருஷ்ணன் கூட்டணி மூன்றாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளனர். விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவு, N கணேஷ் குமார் படத்தொகுப்பு, சாம் CS இசை என அகிலன் தொழில்நுட்ப ரீதியில் வலுவான ஆளுமைகளின் பங்களிப்பில் சிறப்பாக உருவாகியுள்ளது.

ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மனிஷா கல்ரா படம் குறித்து கூறுகையில், ஜீ 5 தளத்தில் உள்ள தமிழ் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தொடர்ச்சியாக சிறப்பான படைப்புகளை வழங்க வேண்டும் என்ற எங்களது நோக்கம், எங்களுக்கு பெரும் வெற்றியை கொடுத்துள்ளது. சிறப்பான படைப்புகள் பார்வையாளர்களை மகிழ்விப்பதோடு, ZEE5 யை அவர்களின் விருப்பமான தளமாக மாற்றவும் உதவியுள்ளது. கோலிவுட் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களின் பங்களிப்பில் நல்ல படைப்புகளை விரும்பி பார்க்கிறார்கள். அந்த வகையில் தமிழில் அடுத்த சிறந்த படைப்பாகஅகிலன் படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவிப்பது மகிழ்ச்சி. முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்தத் திரைப்படம் ஆக்சன் கலந்த எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்விக்கும்.

இயக்குநர் N.கல்யாணகிருஷ்ணன் கூறுகையில்.., “அகிலன் படத்தில் பணிபுரிந்தது மிக உற்சாகமான அனுபவமாக இருந்தது. எழுதி இயக்குவது முதல் இந்தப் படத்தை விளம்பரப்படுத்துவது மற்றும் வெளியிடுவது வரை இது மிக கடினமான வேலை, ஆனால் நான் அதன் ஒவ்வொரு பகுதியையும் மிகவும் ரசித்து செய்தேன். நானும் ஜெயம் ரவியும் இணைந்து பணியாற்றிய மூன்றாவது படம் இது, நான் படைத்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு தங்களை முழுதாக மாற்றிக்கொண்டு அதற்கு தேவையான அனைத்தையும் அளித்த அற்புதமான நடிகர்கள் மற்றும் அயராத உழைப்பை வழங்கிய குழுவினரின் ஆதரவை நான் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றிக்குப் பிறகு, அகிலன் இப்போது ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. உலகம் முழுவதிலுமான பார்வையாளர்கள் இப்படத்தை நாங்கள் உருவாக்கும்போது மகிழ்ந்ததைப் போலவே, பார்த்து மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்.

நடிகர் ஜெயம் ரவி கூறியதாவது, “இப்படத்தில் துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராக இருக்கக் கூடிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அகிலன் திரைப்படத்தில் மாறுபட்ட ஒரு வில்லன் சாயல் இருக்க கூடிய வேடத்தில் நான் எனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தேன். வில்லன் கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பை வெளிக்காட்டுவதற்கான சரியான கதைக்களமாக இருந்தது அகிலன். மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனர் N.கல்யாணகிருஷ்ணனுடன் மீண்டும் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் அறிந்திராத ஒரு கதைக்களத்தில் புதிதான ஒரு கதாபாத்திரத்தில் நான் என்னை மாற்றிக்கொண்டு, அந்த கதைக்களத்திற்கு ஏற்ற ஒரு நடிப்பைக் கொடுக்க எனக்கு உறுதுணையாக இருந்தது இயக்குநர் தான். அவர் எனது நண்பர் என்பதால் நான் என்னை இலகுவாக இதில் இணைத்து கொண்டேன். இந்தப் படத்தில் நடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் எனது இயக்குநர் என் மீது வைத்த நம்பிக்கை, என்னை பரிசோதனை முயற்சிகளை செய்ய தூண்டியது. இப்போது ZEE5 இல் அகிலன் ஸ்ட்ரீமிங் ஆகிறது. எங்கள் அன்பையும், உழைப்பையும் இந்தப் படம் மூலம் ரசிகர்கள் பார்த்து, ஒரு உணர்ச்சி பெருக்கான அனுபவத்தை பெறுவார்கள் என நம்புகிறேன்.

More News

அதிகரிக்கும் XXB.1.16 கொரோனா பரவல்… ஆபத்தை ஏற்படுத்துமா?

இந்தியா முழுக்க தற்போது உருமாறிய கொரோனா XXB.1.16 வகை தொற்று அதிகளவில் பரவிவருகிறது.

 வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்பட பலர் நடிப்பில் உருவான 'விடுதலை' திரைப்படத்தின் முதல் பாகம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

ரூ.2500 கோடி மோசடி வழக்கில் தமிழ் நடிகருக்கு தொடர்பா?  போலீஸார் விசாரணை..!

2500 கோடி மோசடி வழக்கில் தமிழ் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 

'இந்தியன் 2' அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்கும் நாடு இதுதான்: கமல் வெளியிட்ட மாஸ் புகைப்படம்..!

 கடந்த சில மாதங்களாக 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இதில் உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டிருக்கும் நிலையில்

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்.. வைரல் புகைப்படங்கள்..!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் கடந்த சில ஆண்டுகள் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தமிழர்களின் தொன்மையான பல பொருள்கள் இங்கு கிடைத்து வருவதாகவும்