அதுக்குள்ளவா..? ஜெயம் ரவியின் 'அகிலன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,March 17 2023]

ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் அதற்குள் இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘அகிலன்’. இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் ரிலீசுக்கு பின்னர் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் ‘அகிலன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் மட்டுமே ஆகி உள்ள நிலையில் தற்போது இந்த படம் ஜீ தமிழ் ஓடிடி தளத்தில் வரும் 31ஆம் தேதி வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு திரைப்படம் திரையரங்கில் வெளியாகிய ஒரு மாதம் கழித்தே ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர்கள் நிபந்தனை விதித்துள்ள நிலையில் 21 நாட்களில் ‘அகிலன்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது. திரையரங்கில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத ‘அகிலன்’ ஓடிடியில் நல்ல வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

More News

சொந்த வீடு கட்டிய விஜய் டிவி பிரபலம்.. திருமண மண்டபம் போல் பிரமாண்டமான வீடு..!

விஜய் டிவி பிரபலம் ஒருவர் சொந்த வீடு கட்டி உள்ள நிலையில் இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து

கணவரின் பிறந்த நாளில் ரொமான்ஸ் போட்டோஷூட்.. அஜித் நாயகியின் அழகிய புகைப்படங்கள்..!

 அஜித் படத்தில் நாயகியாக நடித்த நடிகை தனது கணவரின் பிறந்தநாளை அடுத்து எடுக்கப்பட்ட ரொமான்ஸ் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன

திரையரங்கில் மிஸ் செய்த சூப்பர் காட்சி: 'வாத்தி' டெலிடட் சீன் ரிலீஸ்..!

தனுஷ் நடித்த வார்த்தை 'வாத்தி' கடந்த மாதம் வெளியானது என்பதும் இந்த படம் இன்று முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே. 'வாத்தி' திரைப்படம்

மணிமேகலையை அடுத்து 'குக்வித் கோமாளி'யில் இருந்து விலகுகிறாரா குரேஷி.. அவரே அளித்த விளக்கம்..!

விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி' சீசன் 4 தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனில் பழைய கோமாளிகளான மணிமேகலை, குரேஷி, புகழ் மற்றும் சுனிதா ஆகிய நான்கு பேர்கள் மட்டுமே உள்ளனர்.

கவின் அடுத்த படத்தின் நாயகி சிவகார்த்திகேயன் பட நடிகையா?

கவின் நடிக்கும் அடுத்த படம் தகவல் குறித்து சமீபத்தில் கசிந்த நிலையில் இந்த படத்தில் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நாயகியாக நடித்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.