close
Choose your channels

ஜெயம் ரவியின் அடுத்த பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Sunday, March 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ உள்பட 3 படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஜெயம் ரவி நடித்து வந்த படங்களில் ஒன்றான ’பூமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட்லுக் ஏற்கனவே வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இந்த போஸ்டரை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். மேலும் இந்த படத்தின் டீசர் மார்ச் 9ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ஜெயம்ரவி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி ஜோடியாக நிதிஅகர்வால் நடித்து வரும் இந்த படத்தில் ரோனிட் ராய், சதீஷ், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையில், டட்லி ஒளிப்பதிவில் ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இந்த படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை லட்சுமண் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ’ரோமியோ ஜூலியட்’ மற்றும் ’போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.