close
Choose your channels

ஜெயம் ரவியின் அடுத்த படம் ஓடிடி ரிலீஸா? பரபரப்பு தகவல் 

Monday, September 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இந்தியா முழுவதும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதனால் நாடு முழுவதும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன.

தமிழகத்திலும் சூர்யாவின் ’சூரரைப்போற்று’, விஜய்சேதுபதியின் ’க/பெ ரணசிங்கம்’ உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக இருக்கும் அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் லட்சுமண் இயக்கிய ’பூமி’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பாளர் இன்னும் உறுதி செய்யவில்லை என்றாலும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவியின் 25வது படமான இந்த படத்தில் அவர் ஒரு புரட்சி விவசாயி ஆக நடித்திருக்கிறார் என்பதும், அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் ரோஹித் ராய், சதீஷ், தம்பி ராமையா, ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையில் டட்லி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.