close
Choose your channels

வித்தியாசமான கெட்டப்பில் ஜெயம் ரவி: கோமாளி ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

Saturday, May 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவான 'கோமாளி' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியாகவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி சற்றுமுன் இணையதளங்களில் 'கோமாளி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது. நோயாளி உடையில் கையில் குளுகோஸ் ஏற்றப்படும் வித்தியாசமான தோற்றம் இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் உள்ளது. மேலும் 'கோமாளி' என்ற டைட்டில் எழுத்தில் 1990, 2000, 2005, 2010, 2013 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகள் குறிப்பிடப்பட்டிருப்பதால் இது இந்த படத்தின் கதை நடக்கும் ஆண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கேஎஸ். ரவிகுமார், யோகிபாபு உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை பிரதீப் ரெங்கநாதன் இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில் ப்ரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.