ஜெயம் ரவி படம் உள்பட இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள்? முழு விவரங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,April 18 2024]

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்த ’சைரன்’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில் தற்போது இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் வெள்ளி அன்று வெளியாக உள்ளது

அதேபோல் வைபவ், நந்திதா ஸ்வேதா நடித்த ’ரணம்’ என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிகழ்வில் இந்த படம் இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

மேலும் ’யாவரும் வல்லவரே’ என்ற தமிழ் படம் ஆஹா ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் இதில் சமுத்திரக்கனி முக்கிய இடத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வாரம் வெளியாகும் மற்ற மொழி திரைப்படங்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

‘சாகு’ என்ற தெலுங்கு திரைப்படம் ஆஹா ஓடிடியில், ‘மை டியர் டோங்கா’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில், ‘ஜென்’ என்ற தெலுங்கு திரைப்படம் ஈடிவி வின் ஓடிடியில், ‘ராம அயோத்தியா’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில் வெளியாகவுள்ளது. மேலும் ‘சைலன்ஸ் 2’ என்ற இந்தி படம் ஜீ 5 ஓடிடியில், ‘ஆர்ட்டிக்கிள் 370’ என்ற இந்தி படம் ஜியோ சினிமாவில், ‘ஆல் இந்தியா ரேங்க்’ என்ற இந்தி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது

மேலும் ‘நீல ராத்திரி’ என்ற மலையாள திரைப்படம் சைனா ப்ளே என்ற ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

More News

நீ கன்னித்தன்மையை எப்போது இழந்தாய்? மகனிடம் அம்மா கேட்கும் கேள்வியா இது? நடிகைக்கு குவியும் கண்டனம்.!

பிரபல நடிகை தனது மகனிடம் 'நீ எப்போது கன்னித்தன்மையை இழந்தாய்' என்ற கேள்வி கேட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் 'ஒரு அம்மா மகனிடம் கேட்கும் கேள்வியா இது? என்று நெட்டிசன்கள் கடும்

சபாஷ் சரியான போட்டி.. ரஜினியின் அடுத்த பட சம்பளம் 300 கோடி ரூபாயா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'வேட்டையன்' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தலைவர் 171

பாகிஸ்தானை ரொம்ப ஈஸியா அடிச்சிட்ரோம், ஆனால் இதை செய்ய முடியலையே: பிக்பாஸ் ஆரி ஆதங்கம்

பாகிஸ்தான் உள்ளே சென்று அவர்களை அடித்து நொறுக்கி விட்டு மீண்டும் பத்திரமாக நாம் திரும்பி விடுகிறோம், ஆனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை நம்மால் தடுக்க முடியவில்லை

உத்தம வில்லன் லாபகரமான படமா? யூடியூப் சேனலுக்கு லிங்குசாமியின் நிறுவனம் கண்டனம்..!

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் 'உத்தம வில்லன்' திரைப்படம் தங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்த படம் என்றும் இந்த படம் லாபகரமான

எம் எஸ் பாஸ்கர் முக்கிய வேடத்தில் நடித்த அக்கரன் திரைப்பட இசை வெளியீட்டு விழா..!

குன்றம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர்  அருண் K பிரசாத் இயக்கத்தில், எம் எஸ் பாஸ்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, மாறுபட்ட களத்தில் வித்தியாசமான திரில்லர் திரைப்படமாக