மிருதன்' ரன்னிங் டைம் மற்றும் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Monday,February 08 2016]
ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டு வெளிவரும் முதல் படமான 'மிருதன்' திரைப்படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டு 'ஏ' சர்டிபிகேட் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு எடுத்து செல்ல படக்குழுவினர் திட்டமிட்டதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போது வந்த புதிய தகவலின்படி இந்த படத்தை 'ஏ' சர்டிபிகேட்டுடன் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்து ரிலீஸ் தேதியையும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

'மிருதன்' திரைப்படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் 108 நிமிடங்கள் அதாவது 1 மணி நேரம் 48 நிமிடங்கள் ஓடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் ரவி, லட்சுமிமேனன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை சக்தி செளந்திரராஜன் இயக்கியுள்ளார். தமிழில் வெளியாகும் முதல் ஜோம்பி திரைப்படமான இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல் பேசிய முழு உரை

கோலிவுட் திரையுலகினர் மட்டுமின்றி இந்திய திரையுலகினர்களும், ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட கூடிய ஒரு விஷயம் என்றால்...

ஹாலிவுட்டில் தயாராகும் சுதந்திர போராட்ட திரைப்படத்தில் நாசர்

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் சமீபத்தில் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானார்...

2016-லும் 3 படங்கள். கமலின் மெகா திட்டம்

கடந்த 2015ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த பாபநாசம், உத்தமவில்லன் மற்றும் தூங்காவனம் ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகியது...

ஜெயம் ரவியின் மிருதனுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்

கடந்த 2015ஆம் ஆண்டு நான்கு படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வந்தவர் ஜெயம் ரவி. இவருடைய நடிப்பில் இவ்வருடம் வெளியாகவுள்ள முதல் படம் 'மிருதன்'. ...

கணிதன் சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதி

அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான ''ஈட்டி''திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால் அவருடைய அடுத்த படமான 'கணிதன்' படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ...