தமிழ், தெலுங்கை அடுத்து வங்க மொழியிலும் சாதனை புரிந்த ஜெயம் ரவி படம்

  • IndiaGlitz, [Saturday,May 06 2017]

கடந்த 2015ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்தசாமி, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் 'தனி ஒருவன். இந்த படம் கோலிவுட்டில் வசூல் சாதனை செய்த நிலையில் ராம்சரண் தேஜா, அரவிந்தசாமி, ராகுல் ப்ரித்திசிங் நடிப்பில் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் சூப்பர் ஹிட் ஆகியது.
இந்த படத்திற்கு முன்பு வரை ரீமேக் இயக்குனர் என்ற பெயர் பெற்றிருந்த மோகன் ராஜா, இந்த படத்திற்கு பின்னர் அந்த பெயர் மாறியதோடு, அவருடைய படம் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெற்றி பெற்ற 'தனி ஒருவன்' தற்போது வங்க மொழியில் வெளியாகி அங்கும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
பொதுவாக ஆர்ட் படங்களை மட்டுமே ரசிக்கும் வங்க மொழி மக்கள் முதன்முறையாக ஒரு கமர்ஷியல் படத்திற்கு வெற்றியை தந்துள்ளனர். 'ஒன்' என்ற பெயரில் ரிமேக் ஆன இந்த படத்தில் ஜெயம்ரவி கேரக்ரில் யாஷ்தாஸ் குப்தா, அரவிந்த்சாமி கேரக்டரில் ப்ரோசன்ஜித் சட்டர்ஜி, நயன்தாரா கேரக்டரில் நுஸ்ரத் ஜஹான் நடித்தள்ளனர்.
இந்த படம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி மேற்குவங்க மாநிலத்தில் வரலாறு காணாத வசூல் சாதனையை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி பெங்காளி மக்கள் வசிக்கும் திரிபுரா, அஸ்ஸாம், ஜார்கண்ட் மாநிலத்திலும் வெற்றிகரகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

More News

நடிகர் சங்க கட்டிடம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட உள்ள இடத்தில் 33 அடி சாலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதி குடியிருப்பு வாசிகளான அண்ணாமலை மற்றும் ஸ்ரீரங்கன் ஆகியோர் இணைந்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்திருந்தோம்.

நயன்தாராவின் திடீர் போர்ச்சுக்கல் பயணம் ஏன்?

கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' படத்தில் பிசியாக நடித்து கொண்டிருந்த நிலையில் நேற்றிரவு அவர் திடீரென போர்ச்சுக்கல் கிளம்பி சென்றார். அவர் நீண்டகாலமாக தாமதமாகிக்கொண்டிருந்த தெலுங்கு படம் ஒன்றின் படப்பிடிப்பிற்காக போர்ச்சுக்கல் சென்றுள்ளதாக தெரிகிறது...

ஒரே மாதத்தில் முடிவடையும் ஜீவா படத்தின் படப்பிடிப்பு

அட்லி தயாரிப்பில் ஜீவா நடித்த 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கு 'கீ' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது...

பாலியல் தொழிலை விருப்பத்துடன் செய்தால் தவறில்லை. குஜராத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாலியல் தொழில் செய்ய பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டால் மட்டுமே அது தவறு என்றும், ஒரு பெண் விரும்பியே பாலியல் தொழில் செய்தால் அது தவறு இல்லை என்றும், அவ்வாறு விரும்பி பாலியல் தொழில் செய்யும் பெண்ணையும் அவரது வாடிக்கையாளர்களையும் போலீசார் கைது செய்ய கூடாது என்றும் குஜராத் ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது...

'பாகுபலி' படங்களின் மாஸ் காட்சிகளுக்கு 'பவர்ஸ்டார் காரணமா? புதிய தகவல்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த 'பாகுபலி 2' படம் உலக அளவில் ரூ.1000 கோடி வசூலை நெருங்கிவிட்டது. ரூ.1000 கோடி கிளப்பில் இணையும் முதல் இந்திய படம் என்ற பெருமையை இந்த படம் இன்னும் ஓரிரு நாட்களில் அடையவுள்ளது...