close
Choose your channels

ஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

Saturday, December 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபுதேவா, தமன்னா நடித்த 'தேவி' வெற்றி படத்தை அடுத்து இயக்குனர் விஜய், ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு 'வனமகன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஏற்கனவே 'குமரி கண்டம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டதாக செய்தி வெளிவந்தது. ஆனால் தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ டைட்டிலாக 'வனமகன்' அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி, சாயிஷா சேகல், தம்பி ராமையா உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். வழக்கமாக ஏ.எல்.விஜய் படங்களுக்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் தற்போது ஹீரோவாக பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்க் மிக் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் 'வனமகன்' படத்திற்கு திரு ஒளிப்பதிவும், அந்தோனி எடிட்டிங் பணிகளையும் செய்யவுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.