அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்படும் 'தனி ஒருவன்?

  • IndiaGlitz, [Saturday,November 21 2015]

ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' திரைப்படம் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் வெற்றி படங்களில் ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது. 100வது நாளை நெருங்கியிருக்கும் இந்த படம் எதிர்பார்த்தைவிட பலமடங்கு வசூல் செய்து தியேட்டர் உரிமையாளர்களையும் விநியோகிஸ்தர்களையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

இந்நிலையில் ராம்சரண் தேஜா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்தி உள்பட அனைத்து வட இந்திய மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் ரீமேக் உரிமை மற்றும் சாட்டிலைட் உரிமை ஆகியவற்றை ஏஜிஎஸ் நிறுவனத்திடம் இருந்து வட இந்திய நிறுவனம் ஒன்று மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாகவும், அந்த நிறுவனம் 'தனி ஒருவன்' படத்தை இந்தி உள்பட வட இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.ஒரு தமிழ் திரைப்படம் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுவது கோலிவுட்டுக்கு கிடைத்த பெருமையாகவே கருதப்படுகிறது.

More News

நீதிமன்றத்தில் ஆஜராக நடிகர் வடிவேலுவுக்கு உத்தரவு

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் மற்றும் சரத்குமார் அணிகள் மோதின...

ஆர்யாவின் 'இஞ்சி இடுப்பழகி' சென்சார் தகவல்கள்

'இஞ்சி இடுப்பழகி' என்ற பெயரில் தமிழிலும், 'சைஸ் ஜீரோ' என்ற பெயரில் தெலுங்கிலும் ஆர்யா, அனுஷ்கா நடித்த திரைப்படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ்...

கால்கேர்ள் கேரக்டர்களில் கலக்கிய கோலிவுட் நடிகைகள்

தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் எத்தனையோ வித்தியாசமான கேரக்டர்களை ஏற்று நடித்திருந்தாலும் ஒருசில கேரக்டர்களில் நடிக்க தயக்கம் காட்டுவார்கள்....

விஜய் 60: 3வது முறையாக விஜய்யுடன் இணையும் நாயகி?

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 'விஜய் 60' படம் குறித்து நேற்று முதல் விறுவிறுப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது...

நந்திதாவுக்கு தந்தையாக நடித்த பிரபல இயக்குனர்

கோலிவுட் திரையுலகில் தற்போது இயக்குனர்கள் பலர் நடிகர்களாக மாறி வருகின்றனர். 'உத்தம வில்லன்' படத்தில் கே.பாலசந்தரும்....