close
Choose your channels

மீண்டும் இணைகிறது 'ரோமியோ ஜூலியட்' படக்குழு

Friday, July 3, 2015 • தமிழ் Comments

ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் லட்சுமணன் இயக்கிய 'ரோமியோ ஜூலியட்' திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட் ஆனது என்பதை அனைவரும் அறிவோம். இந்த படத்தின் வெற்றி இயக்குனர் லட்சுமண் உள்பட படக்குழுவினர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் படக்குழுவினர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தியும் தற்போது கிடைத்துள்ளது.

பிரபல நடிகரும், இயக்குனருமாகிய பிரபுதேவா தயாரிக்க இருக்கும் அடுத்த படத்தை லட்சுமண் இயக்கவுள்ளதாகவும், இந்த புதிய படத்தில் ரோமியோ ஜூலியட்' படத்தில் பணிபுரிந்த அனைத்து டெக்னீஷியன்களும் மீண்டும் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். டி.இமான் இசையமைக்கவுள்ள இந்த படத்திற்கு செளந்தரராஜன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படத்திற்கு இரண்டு நாயகிகள் தேவைப்படுவதாகவும், அவர்கள் விரைவில் முடிவு செய்யப்படவுள்ளதாகவும் லட்சுமணன் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz