close
Choose your channels

ஜெயம் ரவியின் 'அடங்கமறு' ரன்னிங் டைம் குறித்த தகவல்

Monday, December 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கிய 'அடங்கமறு' திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறை தின படங்களில் ஒன்றாக வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் டீசர், டிரைலர் குறிப்பாக 6 நிமிட சினீக்பீக் வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 135 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 15 நிமிடங்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஒரு ஆக்சன் படத்திற்கேற்ற சரியான ரன்னிங் டைமை இந்த படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி, ராஷி கண்ணா, சுரேஷ் மேனன், பொன்வண்ணன், சம்பத்ராஜ், அழகம்பெருமாள், பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு 'விக்ரம் வேதா' புகழ் இசையமைப்பாளர் சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சுஜாதா விஜய்குமார் தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.