தீபாவளி தினத்தில் திடீரென களத்தில் குதிக்கும் ஜெயம் ரவி திரைப்படம்

  • IndiaGlitz, [Thursday,October 17 2019]

வரும் தீபாவளி தின விருந்தாக விஜய்யின் ’பிகில்’ மற்றும் கார்த்தியின் ’கைதி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் திடீரென தீபாவளி களத்தில் ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படமும் குதித்துள்ளது.

தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே பிகில் மற்றும் கைதி ரிலீஸ் ஆவதால் தீபாவளி தினத்திற்கு முன்னரே விஜய் மற்றும் கார்த்தியின் ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்குரிய நட்சத்திரத்தின் படத்தை பார்த்து விடுவார்கள்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை வீட்டில் சந்தோஷமாக கொண்டாடும் சினிமா ரசிகர்களுக்காக தீபாவளி தினமான அக்டோபர் 27ஆம் தேதி ஜெயம் ரவியின் சூப்பர்ஹிட் திரைப்படமான ‘கோமாளி’ திரைப்படம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியான இந்த படம் இரண்டரை மாதங்களில் தொலைக்காட்சிக்கு வந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.