பாஜக வேட்பாளராகும் கமல்-விஜயகாந்த் பட நாயகி!


Send us your feedback to audioarticles@vaarta.com


கமல்ஹாசன் நடித்த 'சலங்கை ஒலி', தசாவதாரம்', 'விஜயகாந்த் நடித்த 'ஏழை ஜாதி', உள்பட பல தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த நடிகை ஜெயப்ரதா, பாஜகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக அவர் அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக நடிகை ஜெயப்ரதா, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியிலும், சமாஜ்வாடி கட்சியிலும் இருந்துள்ளார். சமாஜ்வாடி கட்சியின் சார்பில் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியான ஜெயப்ரதா, அதன்பின் கடந்த 2010ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி அமர்சிங்குடன் இணைந்து ராஷ்டிரிய லோக் மன்ச் என்ற கட்சியை தொடங்கினார். இந்த நிலையில் தனது சொந்த கட்சியில் இருந்து வெளியேறி அவர் பாஜகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் முக்கிய வேட்பாளர் ஆசிம்கான் போட்டியிடும் நிலையில் அவருக்கு எதிராக ஜெயப்ரதாவை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments