ஐந்து மொழிகளில் ஜெயம் ரவியின் அடுத்த படம்.. மாஸ் டைட்டில் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,July 05 2023]

ஜெயம் ரவி நடிக்க இருக்கும் 32 வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

மேலும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்திற்கு ’ஜெனி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார் என்றும் டைட்டில் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகேஷ் முத்துசெல்வன் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை அர்ஜுனன் என்பவர் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் உள்பட 3 கதாநாயகிகள் இந்த படத்தில் நடிப்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில் அது குறித்து அறிவிப்பு இன்றைய டைட்டில் போஸ்டரில் இல்லை என்றாலும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

திரையரங்க டிக்கெட் விலையை உயர்த்த பிரபல தயாரிப்பாளர் எதிர்ப்பு!

திரையரங்கு டிக்கெட் விலையை உயர்த்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என உள்துறை செயலாளருக்கு திரையரங்கு உரிமையாளர்கள் மனு அளித்த நிலையில் திரையரங்கு டிக்கெட் விலையை உயர்த்துவதற்கு பிரபல தயாரிப்பாளர்

நான் அடுத்து பெரிய Pan Indian படத்தில் நடிக்கிறேன் - லிஷா சின்னு

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போர்தொழில் படத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகை Lisha Chinnu நமக்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்தா

நடிகர் அர்ஜுனின் 2-வது மகளைப் பார்த்துள்ளீர்களா? வைரலாகும் நீச்சல் உடை புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுவரும் நடிகர் அர்ஜுனின் முதல் மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே ஒருசில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே அறிமுகமான நிலையி

பிகினியில் புதுமை செய்த பிரபல நடிகை? இணையத்தில் தீயாய் பரவும் ஹாட் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்துவரும் நடிகை ஒருவர் கடற்கரையில் பென்குயின் போன்று பிகினி அணிந்து நின்றிருக்கும் புகைப்படம்

இந்த வாரம் 4 தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ்.. ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் 4 தமிழ் திரைப்படங்கள் வெளியாக இருப்பது