சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஆதரவாக குரல் எழுப்பிய ஜீவா

  • IndiaGlitz, [Sunday,May 21 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய அரசியல் வருகை குறித்த பேச்சுக்கு கடந்த சில நாட்களாக பல்வேறு தலைவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். ஆளும் கட்சி தலைவர்கள் உள்பட பல தலைவர்கள் ரஜினியின் அரசியல் வருகையை ஆதரிப்பாக கூறி வரும் நிலையில் ஒருசில தலைவர்கள் மட்டும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் சீமான் ரஜினிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

தமிழகத்தை தமிழர் மட்டுமே ஆள வேண்டும், ரஜினி தமிழகத்தில் கோடி கோடியாய் சம்பாதிக்கட்டும், தமிழக மக்களுக்கு சேவை செய்யட்டும் ஆனால் முதல்வராகி தமிழர்களை ஆள வேண்டும் என்று மட்டும் நினைக்க வேண்டாம், தமிழர்களை ஒரு தமிழன் தான் இனி ஆள வேண்டும் என்று கூறி வருகிறார். அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் 'கபாலி' படத்திற்கு வாங்கிய சம்பளத்தை வெளிப்படையாக சொல்வாரா? என்றும் அவர் கேள்வி கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் சீமானின் கேள்விக்கு லொள்ளுசபா ஜீவா, சீமான் அவர்களே இதுவரை வெளிநாடுகளில் இருந்து நீங்கள் கட்சிக்கு நன்கொடையாக வாங்கிய பணத்தை வெளிப்படையாக கணக்கு காட்டுவீர்களா? என்று பதில் கேள்வி கேட்டுள்ளார். ஜீவாவின் இந்த கேள்விக்கு சீமான் பதில் சொல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

தமிழக முதல்வர் கலந்து கொண்ட முதல் ஆடியோ ரிலீஸ் விழா

தமிழக முதல்வர் எடப்பாடி பழநிச்சாமி முதன்முதலாக ஒரு திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டதோடு, அந்த படத்தின் ஹீரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த படம் 'வைரமகன்', படத்தின் ஹீரோ கோபிகாந்தி...

'பாகுபலி' வெற்றியை தொடர்ந்து டிரண்ட் ஆகும் சரித்திர படங்கள்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களின் வெற்றியை தொடர்ந்து தென்னிந்திய திரையுலகில் குறிப்பாக கோலிவுட்டில் மீண்டும் சரித்திர படங்களின் டிரெண்ட் ஆரம்பித்துவிட்டதாகவே கருதப்படுகிறது...

சாட்டிலைட் உரிமை: தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி முடிவு

ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கு அவர் தயாரிக்கும் படத்தின் சாட்டிலைட் உரிமை வியாபாரம் என்பது மிகவும் முக்கியமானது. படத்தின் பட்ஜெட்டின் ஒரு பெரும் பகுதி சாட்டிலைட் உரிமையில் இருந்தே கிடைத்துவிடும்....

சினிமா என்றால் ரஜினி, கமல், ராஜமெளலி மட்டும் தானா? ஆர்.கே.செல்வமணி ஆவேசம்

மத்திய அரசு சமீபத்தில் திரையுலகிற்கும் ஜி.எஸ்.டி. வரி பொருந்தும் என அறிவித்துள்ளதால் திரையரங்குகளின் டிக்கெட் விலையின் மீது 28% வரிவிதிக்கப்படவுள்ளது. இந்த நடைமுறை வரும் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படவுள்ளது...

ரஜினி யாருடன் கூட்டணி வைக்கக்கூடாது: திருமாவளவன் கருத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து ஒரிரு வார்த்தைகள் தான் பேசினார். ஆனால் அதுவே தமிழக அரசியலில் ஒரு பெரும் புயலை கிளப்பிவிட்டது. தமிழக அரசியல்வாதிகள் அனைவருக்கும் 'ரஜினி ஜூரம்' பிடித்துவிட்டதாக டுவிட்டரில் கூட கிண்டலுடன் பதிவுகள் வருகிறது...