ஜீவஜோதியின் வாழ்க்கை படமாகிறது...! அதுவும் பல மொழிகளில்....

  • IndiaGlitz, [Thursday,July 08 2021]

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில், ஜீவஜோதியின் வாழ்க்கை படமாக உள்ளது. இந்த திரைப்படத்தை ஜங்க்லீ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

சரவணபவன் உணவக நிறுவனர் தான் பி.ராஜகோபால். தென்னிந்தியாவின் உணவு சுவையை உலகளவில் அறியச்செய்த பெருமை இவரையே சாரும். ஆனால் இவர் செய்த தவறு, தன்னை விட பாதி வயதுடைய பெண் மீது ஆசைக்கொண்டதுதான், அதுவும் மூன்றாவது மனைவியாக. ஜீவஜோதி இதற்கு சம்மதிக்காததால், அவரது கணவர் சாந்தகுமார் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராஜகோபால், சிறை தண்டனை பெறாமலே இறந்து விட்டார். இந்நிலையில் இந்த சம்பவங்கள் குறித்து ஆதாரங்களுடன் திரட்டப்பட்ட ஆடியோ, வீடியோக்கள் தான் கதையாக உருவாக்கப்பட்டு, அது திரைப்படமாகவுள்ளது.

இதுகுறித்து ஜீவஜோதி சாந்தகுமார் பேசியிருப்பதாவது, என்னுடைய வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டங்களை, சட்டரீதியாக நான் சந்தித்த கஷ்டங்களை, உணர்வுபூர்வுமிக்க முறையில் இப்படம் தயாராகவுள்ளது. வசதியிருந்த முதலாளிக்கு எதிராக 18 வருடங்கள் என்னுடைய போராட்டம் தொடர்ந்தது. என் கதையா படமாக்க முன்வந்திருப்பது, மகிழ்ச்சி அளிக்கின்றது. இக்கதையை திரையில் பார்க்கும்போது, ஆணாதிக்க சமூகத்தை பற்றியும், நான் அனுபவித்து வலி குறித்தும் அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.

இந்த திரைப்படத்திற்காக நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பிரபல திரைக்கதை ஆசிரியர் பவானி ஐயர், இப்படத்திற்காக ஒப்பந்தமாகியுள்ளார் . இவர் சமீபத்தில் பாஜக-விலும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

விண்ணை தாண்டியும் வரவேணாம், வீட்டை தாண்டியும் வரவேணாம்: சிம்புவின் 'தப்பு பண்ணிட்டேன்' பாடல்!

சிம்பு பாடிய 'தப்பு பண்ணிட்டேன்' என்ற பாடலின் டீசர் நேற்று வெளியான நிலையில் இன்று அந்த பாடல் வெளியாகும் என இந்த பாடலின் தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா ஏற்கனவே அறிவித்திருந்தார்

டாக்டர் மகேந்திரனை அடுத்து திமுகவை இணைகிறாரா பத்மப்ரியா?

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார் என்பதும் அந்த கட்சி ஒரு பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒரு சட்டசபை தேர்தலை சந்தித்து விட்டது என்பதும்

தமிழகத்தில் 45 நாட்களில் மருத்துவமனை....! "டீமேஜ்" நிறுவனம் உலக சாதனை படைத்தது எப்படி...?

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வெறும் 45 நாட்களில் மருத்துவமனையை உருவாக்கியுள்ளது

ராஷிகண்ணாவின் வேற லெவல் வொர்க்-அவுட் வீடியோ!

பிரபல தெலுங்கு நடிகையான ராஷிகண்ணா தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை அடுத்து அவர் ஜெயம் ரவியின்

சூர்யாவை பாஜக மிரட்டினால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும்....! சீமான் எச்சரிக்கை...!

ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக நடிகர் சூர்யா கருத&#