close
Choose your channels

5 மொழிகளில் உருவாகும் பிரபல வில்லன் நடிகரின் படம்

Friday, January 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹீரோ, வில்லன் என தமிழ் திரையுலகில் வலம் வந்த நடிகர் ஜீவன், காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் ஜீவன் தற்போது ‘பாம்பாட்டம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஜீவன் நடிக்கும் முதல் ஹாரர் படமான இந்த படத்தை வி.சி வடிவுடையான் இயக்கி வருகிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் உருவாகும் இந்த ‘பாம்பாட்டம்’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

அம்ரீஷ் இசையில் யுகபாரதி பாடல் வரிகளில் இனியன் ஹரீஸ் ஒளிப்பதிவில், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை பழனிவேல் என்பவர் தயாரித்து வருகிறார். இவர் ஏற்கனவே 6.2, ஓரம்போ, வாத்தியார் போன்ற படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.