பிரபல நட்சத்திர தம்பதி வீட்டில் ரூ.7 கோடி பழைய நோட்டுக்கள் சிக்கியதா?

  • IndiaGlitz, [Sunday,June 25 2017]

டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா நட்சத்திர தம்பதி வீட்டின் மாடியில் கடந்த ஆண்டு மத்திய அரசு செல்லாது என்று அறிவித்த ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் ரூ.7 கோடி அளவிற்கு சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து சினிமா தயாரிப்பு மேலாளர்கள் ஸ்ரீநிவாஸ், ரவி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நடிகை ஜீவிதாவின் சினிமா தயாரிப்பு அலுவலகம் உள்ள வீட்டின் மாடியில் தான் இந்த தொகை பிடிபட்டுள்ளது. மேலும் கைதான ஸ்ரீநிவாஸ், நடிகை ஜீவிதாவின் மேலாளர் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இந்த தகவலை நடிகை ஜீவிதா மறுத்துள்ளார். செல்லாத நோட்டு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ஸ்ரீநிவாஸ், தனது கணவர் நடித்து வரும் 'கருடலேகா' படத்தில் மேலாளராக பணியாற்றி வருவதாகவும், தனது கணவருக்கு மட்டுமின்றி அவர் பல நடிகர்களுக்கும் மேலாளராக பணியாற்றி வருவதாகவும் கூறிய ஜீவிதா, ஸ்ரீநிவாஸ் தனது உறவினர் இல்லை என்று வெளிவந்த தகவல் பொய்யானது என்றும் கூறியுள்ளார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.7 கோடிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் இதுகுறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

கார்த்தியின் அடுத்த ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த ஆண்டு கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படம் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக தயாராகி வருகிறது....

பத்தே நிமிடங்களில் முடிந்த அம்மா கிரியேஷன்ஸ் பட வியாபாரம்

பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெமினி கணேசனும், சுருளிராஜனும்' திரைபப்டத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த டிரைலரில் உள்ள பாசிட்டிவ்  காட்சிகளினால் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையின் வியாபாரம் பத்தே நிமிடங்களில் முடிந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்

விவசாயிகளுக்காக அரசை எதிர்த்து போராட தயார். பிரபல நடிகை

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் ரஜினி, கமல் உள்பட முன்ன்ணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமான நடிகையாக இருந்தவர் கெளதமி.

18 வயது தமிழக இளம் விஞ்ஞானிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து

தமிழகத்தை சேர்ந்த 18 வயது இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக் உருவாக்கிய வெறும் 64 கிராம் கொண்ட 'கலாம்சட்' என்ற செயற்கைக்கோள் சமீபத்தில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

ரஜினி கட்சியில் அஜித், விஜய் இணணந்தால்....எஸ்.வி.சேகர்

அரசியல் களத்தில் ரஜினியுடன் அஜித், விஜய் இணைந்தால் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்...