close
Choose your channels

உலகின் நெம்பர் ஒன் பணக்காரர் இவர்தான்… ஃபோர்ப்ஸ் வெளியிட்ட சுவாரசியத் தகவல்!!!

Thursday, August 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகின் நெம்பர் ஒன் பணக்காரர் இவர்தான்… ஃபோர்ப்ஸ் வெளியிட்ட சுவாரசியத் தகவல்!!!

 

உலகப் பிரபலங்களின் சொத்து மதிப்பை கணக்கிட்டு வெளியிடும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை உலகின் நெம்பர் ஒன் பணக்காரர் பட்டியலைத் தற்போது வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் அமோசான் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் பெசோஸ் முதல் இடம் பிடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தகக்து. கடந்த ஜனவரி 1 ஆம் தேதி 115 பில்லியன் டாலர் மதிப்புகளை மட்டுமே வைத்திருந்த ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு இன்று காலை 205 பில்லியனாக அதிகரித்து இருக்கிறது.

கொரோனா பரவல் தாக்கத்தால் இகாமர்ஸ் தொழில்கள் கடந்த 5 மாதங்களாக முடங்கியிருந்தது. ஆனால் தற்போது ஊரடங்கு விதிமுறைகள் தளர்ந்து மக்கள் இயல்பு நிலைமைக்கு திரும்பியுள்ளனர். இதனால் மக்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதும் சீராகி இருக்கிறது. இந்நிலையில் 200 பில்லியன் டாலர்களை நிகர சொத்து மதிப்புக் கொண்ட ஜெஃப் பெசோஸ் தற்போது உலகின் நெம்பர் ஒன் பணக்காரராக மாறியிருக்கிறார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சொந்தக்காரரான பில்கேட்ஸின் சொத்து மதிப்பு தற்போது 116.2 பில்லியனாக இருக்கிறது. இதனால் பில்கேட்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார். பில்கேட்ஸை விட ஜெஃப் பெசோஸ் 89 பில்லியன் டாலர்களை அதிகமாக வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜெஃப் பெசோஸ் பற்றிக் கருத்துக்கூறிய ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை கடந்த ஆண்டு நடைபெற்ற விவாகரத்து வழக்கில் ஆஜராகாமல் இருந்திருந்தால் 2019 லேயே இவர் உலகின் முதல் பணக்கரராக உயர்ந்து இருப்பார் எனத் தெரிவித்து இருக்கிறது.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் தனது முதல் மனைவி மெக்கன்லி ஸ்காட்டை பெசோஸ் விவாகரத்து செய்தார். அதற்கு நட்டத் தொகையாக சொத்து மதிப்பில் 25% பங்குகளை கொடுக்கவும் அவர் ஒத்துக்கொண்டார். இதனால் கடந்த ஆண்டு முதல் இடத்தைப் பிடிக்க முடியவில்லை. கணவரிடமிருந்து 25% பங்குகளைப் பெற்றுக்கொண்ட மெக்கன்ஸி ஸ்காட் தற்போது உலகின் 14 ஆவது பணக்காரர் மற்றும் உலகின் 2 ஆவது பெண் பணக்காரராகத் திகழ்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் மென் பொறியியல் மற்றும் கணினி அறிவியல் பட்டம் பெற்றவர் ஜெஃப் பெசோஸ் அமெரிக்காவின் வால்ட் ஸ்டீரிட்டில் கடந்த 1986-1994 வரை பல்வேறு தொழில்நுட்பத் துறைகளில் பணியாற்றினார். முதன் முதலாக 1994 இல் நியூயார்க்கில் அமெசான் நிறுவனத்தை இவர் தொடங்கினார். அப்போது அமேசான் ஆன்லைனில் புத்தகத்தை மட்டுமே விற்பனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது உலகின் நம்பர் ஒன் ஆன்லைன் இணைய விற்பனை நிறுவனமாகச் அமேசான் செயல்பட்டு வருகிறது.

விற்பனை சேவைகளைத் தவிர வீடியோ, ஆடியோ, ஸ்ட்ரீமிங் கிளவுட், கம்யூட்டிங் போன்ற தொழில்நுட்பங்களிலும் அமேசான் சிறந்து விளங்குகிறது. மேலும் வாஷிங்டன் போஸ்ட் என்ற செய்தித்தாள் நிறுவனமும் பெசோஸ்க்கு சொந்தமானது. விண்வெளித்துறை நிறுவனமான ப்ளூ ஆரிஜின் என்ற நிறுவனமும் இவருக்கு சொந்தமானது. இப்படி பல தொழில்களில் முதலீடு செய்துள்ள ஜெஃப் பெசோஸ் தற்போது உலகின் நெம்பர் ஒன் பணக்காரராக உயர்ந்து இருக்கிறார். இந்தப் பட்டியலில் இந்தியரான முகேஷ் அம்பானி 4 ஆவது இடத்தைப் பிடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.