தமிழ் திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடிப்பது உண்மையா? போனிகபூர் விளக்கம்!

  • IndiaGlitz, [Friday,February 03 2023]

பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து தற்போது போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ’பையா 2’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் ஆர்யா மற்றும் ஜான்விகபூர் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த செய்தி கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி உள்ள நிலையில் போனிகபூர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இதுவரை ஜான்வி கபூர் எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்றும் ஜான்வி கபூர் தமிழ் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் பொய்யான வதந்தி என்றும் அவர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் ’பையா 2’ படத்தில் நடிக்க ஜான்வி கபூர் நடிக்க இதுவரை ஒப்பந்தமாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது பாலிவுட் திரையுலகில் பிஸியாக இருக்கும் ஜான்வி கபூர் தொடர்ந்து இந்தி படங்களிலும் மட்டுமே கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.

More News

மனைவி, குழந்தையுடன் டிரெக்கிங் செல்லும் விராத் கோஹ்லி.. அசத்தல் புகைப்படங்கள்!

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராத் கோஹ்லி தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகளுடன் டிரெக்கிங் செல்லும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

அஜித்தின் 'துணிவு' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த மாதம் 11-ம் தேதி ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது

இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தமான நயன்தாரா.. இயக்குனர்கள் யார் யார்?

 லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளார் என்பதும் இந்த குழந்தைகளை கவனிப்பதற்காக கடந்த சில

கோடி நெருப்பை ஆரம்பிக்கிற ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி: 'பத்து தல' சிங்கிள் பாடல்!

 சிம்பு நடிப்பில், கிருஷ்ணா இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பத்து தல'.

'பரியேறும் பெருமாள்' நடிகர், நாட்டுப்புற கலைஞர் தங்கராஜ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான 'பரியேறும் பெருமாள்' என்ற திரைப்படத்தில் நாயகன் கதிருக்கு தந்தையாக நடித்த நாட்டுப்புறக் கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல் நலக்குறைவு காரணமாக சற்று முன்