close
Choose your channels

'பட்டாஸ்' ரசிகர்களுக்காக வெளியாகும் 'ஜிகிடி கில்லாடி' : இன்னும் சில நிமிடங்களில்

Saturday, January 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'பட்டாஸ்’ திரைப்படம் சமீபத்தில் சென்சாரில் ’யூ’ சான்றிதழ் பெற்று ஜனவரி 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இன்னும் இந்த படத்தின் ரிலீஸுக்கு 4 நாட்கள் மட்டுமே இருப்பதால் தனுஷ் ரசிகர்கள் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் வரவேற்க தயாராகி வருகின்றனர்.

இதனை அடுத்து இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளும் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை 11 30 மணிக்கு இந்த படத்தில் இடம்பெற்ற ’ஜிகிடி கில்லாடி’ என்ற பாடலின் 20 விநாடிகள் வீடியோ ஒன்றை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தனுஷ் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். விவேக்-மெர்வின் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் தனுஷின் அடுத்த வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.