'கொரில்லா' படக்குழுவின் மாஸ்டர் பிளான் குறித்து விஜய்சேதுபதி!

  • IndiaGlitz, [Sunday,June 16 2019]

ஜீவா நடித்த கொரில்லா திரைப்படம் வரும் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேதியில் விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' உள்பட நான்கு திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதால் கொரில்லாவின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றது.

இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் 'கொரில்லா' படத்தின் வீடியோவை வெளியிட்டுள்ள விஜய்சேதுபதி, ''கொரில்லா திரைப்படக்குழுவினர்களின் மாஸ்டர் பிளானின்படி இந்த படம் ஜூலை 5ஆம் தேதி வெளியாகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள 'கொரில்லா' புரமோஷன் வீடியோவிலும் இந்த தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே 'கொரில்லா' வரும் ஜூலை 5ல் ரிலீஸ் ஆவது உறுதி என தெரிகிறது.

ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, யோகிபாபு, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் சிம்பன்ஸி குரங்கு ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது. டான் சாண்டி இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் குருதேவ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

சர்வதேசப்பட விழாவுக்கு தேர்வான ஜிவி பிரகாஷ் திரைப்படம்

இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஜிவி பிரகாஷ், நெடுமுடிவேணு, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த படம் 'சர்வம் தாளமயம்'.

'நேர் கொண்ட பார்வை' ரிலீஸ் தேதியில் மாற்றமா?

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு

'சிவாஜி' பாணியில் 'தர்பாரில்' ஒரு தரமான சம்பவம்: ஏ.ஆர்.,முருகதாஸ் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்றை இயக்குனர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

ஒரே பேருந்தில் மதுரை-தஞ்சாவூர் செல்லும் 40 நடிகர் நடிகைகள்

நடிகர் சங்க தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு அணிகளும் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர்.

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் லிடியன் நாதஸ்வரம்!

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த 'தி வேல்ட்ஸ் பெஸ்ட்' என்ற ரியாலிட்டி ஷோவில் சென்னையை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மாணவர் லிடியன் நாதஸ்வரம் என்ற 12 வயது சிறுவர்