close
Choose your channels

தடைகளை தகர்த்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட ஜீவா படம்!

Monday, February 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய ஜீவா நடிப்பில் இயக்குனரும் எழுத்தாளருமான ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ‘ஜிப்ஸி’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாரான போதிலும் இந்த படம் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் செய்ய முடியாத நிலை இருந்தது.

இந்த படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள், ஒருசில காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறியதை அதற்கு ஒப்புக்கொள்ளாத இயக்குனர் டிரிபியூனலுக்கு சென்றார். இந்த நிலையில் ஒருவழியாக டிரிபியூனலுக்கு சென்ற இந்த படம் ஒருசில ‘கட்’களை பெற்று ‘ஏ’ சான்றிதழ் பெற்று சமீபத்தில் ரிலீசுக்கு தயாரானது. இந்த நிலையில் இந்த படம் வரும் மார்ச் 6 முதல் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடைகளை தகர்த்து மார்ச் 6ஆம் தேதி வெளியாகும் இந்த படம் ஜீவாவுக்கு திருப்புமுனையாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜீவா, நடாஷா சிங், சன்னி வாய்னே, லால் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சந்தோஷ் நாராயணன் இசையில் செல்வகுமார் ஒளிப்பதிவில், ரெய்மண்ட் டெர்ரிக் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.