ஜீவாவுக்கு ஜோடியாகும் அர்ஜூன் ரெட்டி நாயகி

  • IndiaGlitz, [Tuesday,December 26 2017]

ஜீவா நடித்த 'கலகலப்பு 2' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது 'கீ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நிக்கிகல்ராணி அவருக்கு ஜோடியாக நடிக்கின்றார்

இந்த நிலையில் தற்போது அவர் இயக்குனர் டான் சாண்டி இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 'மகாபலிபுரம்' என்ற படத்தை இயக்கிய டான் சாண்டி, இந்த படத்தை காமெடி மற்றும் த்ரில் கொண்ட படமாக இயக்கவுள்ளார்

இந்த நிலையில் இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க 'அர்ஜூன் ரெட்டி' நாயகி ஷாலினி பாண்டே ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே இவர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் '100% காதல்' மற்றும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'நடிகையர் திலகம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்யவுள்ளார். விஜயராகவேந்திரா தயாரிக்கும் இந்த படத்தின் முக்கிய வேடங்களில் ஆர்ஜே பாலாஜி மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நன்றி தெரிவித்த தினகரனுக்கு அதிர்ச்சி பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி

நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட இயக்கங்களை டிடிவி தினகரன் தோற்கடித்தார்.

தனுஷின் 'மாரி 2' இசையமைப்பாளர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கிய 'மாரி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து 'மாரி 2' திரைப்படம் விரைவில் உருவாகவுள்ளது.

11ஆம் வகுப்பு மாணவியை கலெக்டர் இருக்கையில் உட்கார வைத்த கலெக்டர்

திருவண்ணாமலை அருகே செய்யாறு பகுதியில் சமீபத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

நயன்தாராவுக்கு விக்னேஷ்சிவன் கூறிய நெகிழ்ச்சியான வாழ்த்து

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் 'ஐயா' படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் அவருடைய முதல் படம் மனசிநக்கரே (Manassinakkare) என்ற மலையாள படம் ஆகும்.

கமல், ரஜினி யார் கட்சிக்கு ஆதரவு: சந்தானம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவருமே வரும் ஜனவரியில் தங்கள் அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக எதிர்பார்க்கப்படும்