வெற்றிக் கதவை திறந்துவிட்டோம்: 'சங்கிலி புங்கிலி' பட நிறுவனம் பெருமிதம்

  • IndiaGlitz, [Tuesday,May 23 2017]

ஜீவா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் மற்றும் அதனையடுத்த வார நாட்களின் வசூல் திருப்திகரமாக இருந்ததாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் தகவல்களையும் நேற்று பார்த்தோம்.

இந்நிலையில் அட்லியின் 'ஏ ஃபார் ஆப்பிள்' மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் அறிமுக இயக்குனருடன் Ike உடன் இணைந்து வெற்றியின் கதவை மீண்டும் திறந்துள்ளதாக ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிமுக இயக்குனர்களுடன் கைகோர்ப்பது புதிதல்ல. அட்லி இயக்கிய 'ராஜா ராணி, மணிகண்டன் இயக்கிய 'காக்கா முட்டை', சரவணன் இயக்கிய 'எங்கேயும் எப்போதும்' உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம். இம்முறை அறிமுக இயக்குனர் Ike அவர்களுடன் கைகோர்த்து 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தை தயாரித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளது. ஒரு மீடியம் பட்ஜெட் படத்தை தனது திறமையான மார்க்கெட்டிங் மூலம் வெற்றி பெற வைத்த ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த வெற்றி குறித்து ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ விஜய்சிங் கூறியபோது, 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் மூலம் மேலும் ஒரு வெற்றியை பெற்றுள்ளது குறித்து பெருமை அடைகிறோம். ஆடியன்ஸ்களுக்கு பிடித்தமான கதையை தேர்வு செய்து அதை சரியான விதத்தில் தயாரித்து ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக கொடுத்து, சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்தால் வெற்றி பெறலாம் என்பதை மீண்டும் நாங்கள் உணர்ந்துளோம்' என்று கூறியுள்ளார்.

More News

சமுத்திரக்கனிக்கு கிடைத்த முதல் வெற்றியும் கடைசி சலுகையும்...

மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி நடைமுறையை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது.

பிரபல காமெடி நடிகர் மீது போலீசில் புகார் அளித்த மனைவி

பிரபல காமெடி நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துபவருமான பாலாஜி மீது அவர் மனைவி தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

விரைவில் அதிரடி உத்தரவு வரும். சசிகலாவை சந்தித்த பின் கருணாஸ் பேட்டி

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை ஆரம்பத்தில் அதிமுக தலைவர்களும் நிர்வாகிகளும் சிறைக்கு சென்று சந்தித்து வந்தனர்.

'விஸ்வரூபம் 2' குறித்த முக்கிய தகவல்: கமல் அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்றான 'விஸ்வரூபம்' திரைப்படம் பெரும் பிரச்சனைகளை சந்தித்து கடந்த 2013ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது...

ஜிஎஸ்டி வரி எதிரொலி: ஜூனில் ரிலீசாக குவியும் திரைப்படங்கள்

மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி திட்டத்தை திரைத்துறைக்கும் வழங்கியுள்ளதால் வரும் ஜூலை 1 முதல் திரைத்துறைக்கும் 28% வரி விதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது...