எனக்குப் பிடித்த நடிகர் அஜித் தான்: ஜிமிக்கி கம்மல் ஷெரில்

  • IndiaGlitz, [Tuesday,September 12 2017]

பிக்பாஸ் என்ற ஒரே ஒரு நிகழ்ச்சியால் மில்லியன் கணக்கான இளைஞர்களின் மனதில் கொள்ளை கொண்ட ஓவியாவை போல ஓரே ஒரு வீடியோவின் மூலம் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் இணையதளத்தில் வைரலானவர் ஜிமிக்கி கம்மல் ஷெரில்.

ஓணம் தினத்தன்று வெளியான ஷெரில் குழுவினர்களின் நடன வீடியோவுக்கு ஒருசில நாட்களில் 9 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்ததில் இருந்தே இதன் வெற்றியை புரிந்து கொள்ளலாம்.

கொச்சியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் கமார்சஸ் கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து இந்த வீடியோவை தயாரித்துள்ளனர். அதிலும் ஷெரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இந்த கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தில் தனக்கு கிடைத்த வரவேற்பு குறித்து ஷெரில் கூறுகையில், 'இதனை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் சினிமாவில் நடிக்கத் தயார் தான். ஆனால் வீட்டில் ஒப்புக் கொள்வார்களா என்று தெரியவில்லை. தற்போதைக்கு எதுவும் முடிவு செய்யவில்லை. தமிழில் எனக்குப் பிடித்த நடிகர் அஜித் தான் என்று தெரிவித்துள்ளார்.

ஷெரில் பெயரில் டுவிட்டர் பயனாளிகள் ஆர்மியை தொடங்கிவிட்டனர் என்பது கூடுதல் தகவல்

More News

ஜெயலலிதா ஜெயலலிதாதான்! பொதுகுழு விருந்தில் புலம்பி தள்ளிய உறுப்பினர்கள்

ஜெயலலிதா இருந்தபோது பொதுக்குழு கூடுகிறது என்றால் விருந்து சாப்பாடு தடபுடலாக இருக்கும். மட்டன் கறி, வஞ்சிர மீன் என அசைவ சாப்பாடு வாயில் எச்சில் ஊற வைக்கும்.

சசிகலாவை நீக்கும் விவகாரம்: அமைச்சர்கள் மிரட்டலால் திடீரென பின்வாங்கிய ஓபிஎஸ்-ஈபிஎஸ்

அதிமுக பொதுகுழு இன்று காலை கூடிய நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டதாக ஒருமனதாக தீர்மானம் இயற்றப்பட்டது

தங்கையை இழந்த மனவலி எனக்கும் தெரியும்: அனிதா அண்ணனிடம் விஜய்

தளபதி விஜய்க்கு வித்யா என்ற தங்கை இருந்தார் என்பதும், அவர் சிறுவயதில் எதிர்பாராமல் மரணம் அடைந்துவிட்டார் என்பதும் தெரிந்ததே

'100% காதல்' படத்தின் நாயகி திடீர் மாற்றமா?

ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படங்களில் ஒன்று 100% காதல்'. இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 100% லவ்' என்ற படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே.

சசிகலா நியமனம் ரத்து: தினகரன் நியமனங்கள் செல்லாது: அதிமுக பொதுக்குழுவில் அதிரடி தீர்மானங்கள்

அதிமுக பொதுகுழுவுக்கு தடை விதிக்க தினகரன் தரப்பினர் நீதிமன்றம் சென்ற நிலையில் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டதை அடுத்து இன்று காலை அதிமுக பொதுக்குழு சென்னையில் தொடங்கியது.