close
Choose your channels

’சுல்தான்’ பாடலுக்கு வேற லெவலில் ஆட்டம் போட்ட ஜித்தன் ரமேஷ்!

Sunday, June 13, 2021 • தமிழ் Comments

கார்த்தி நடித்த ’சுல்தான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக ’சுல்தான்’ இந்த படத்தில் இடம்பெற்ற ’ஜெய் சுல்தான்’ என்ற பாடல் விவேக்-மெர்வின் இசையில் அனிருத் குரலில் உருவானது என்பதும் இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த பாடலுக்கு பிக்பாஸ் போட்டியாளரும் நடிகருமான ஜித்தன் ரமேஷ் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு ஜித்தன் ரமேஷ் மற்றும் அவருடைய உறவினர் ஒருவருடன் இணைந்து ஆடிய ஆட்டத்தின் வீடியோவை அவரது ஃபாலோயர்கள் ரசித்து வருகின்றனர்



இந்த பாடலை தனது அன்பான ’சுல்தான்’ கூட்டத்திற்கு அர்ப்பணிப்பதாக ஜித்தன் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வீடியோவை பிக்பாஸ் சக போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்தி உள்பட ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz