தற்கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை. டெல்லி தமிழ் மாணவரின் தந்தை பேட்டி

  • IndiaGlitz, [Tuesday,March 14 2017]

டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பில் படித்து கொண்டிருந்த மாணவர் முத்துகிருஷ்ணன் நேற்று தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் தமிழகத்தை மட்டுமின்றி நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் அதிர்வலையை எழுப்பியது. மாணவர் முத்துகிருஷ்ணன் உடல் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றிருப்பதாகவும், பிரேத பரிசோதனையின் அறிக்கைக்கு பின்னரே அடுத்தகட்ட விசாரணை தொடங்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் தங்களது மகன் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்த செய்தியால் அதிர்ச்சி அடைந்த சேலத்தை சேர்ந்த அவருடைய பெற்றோர்கள் ஜீவானந்தம் - அலமேலு நேற்றிரவு டெல்லி கிளம்பி சென்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முத்துகிருஷ்ணன் தந்தை ஜீவானந்தம், "முத்துகிருஷ்ணன் நேற்று மாலை வழக்கம் போல தொலைபேசியில் பேசினான். இந்த வாரம் ஞாயிறு அன்று ஊருக்கு வருவதாக கூறியிருந்தான். தற்கொலை செய்யும் அளவிற்கு எங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவன் கோழையும் கிடையாது. முத்துகிருஷ்ணன் 100 பேர்களை காப்பாற்றும் அளவுக்கு தைரியம் உள்ளவன். அவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டான் என்பதை நம்பவே முடியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.

More News

டெல்லி பல்கலையில் தமிழக மாணவர் தற்கொலை. அதிர்ச்சி தகவல்

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அந்த பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்த தமிழக மாணவர் ஒருவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'2.0 சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் கோலிவுட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் '2.0'.

இரோம் ஷர்மிளாவை தோற்கடித்த முதல்வரை ராஜினாமா செய்ய உத்தரவிட்ட கவர்னர்

பிரபல சமூக சேவகியும், மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவருமான இரோம் ஷர்மிளாவை வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற வைத்து தோற்கடித்தவர் மணிப்பூர் முதல்வர் இபோபி சிங். இவர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று அம்மாநில கவர்னர் உத்தரவிட்டு&#

கமல் பேட்டிக்கு வைகைசெல்வன் எதிர்ப்பு, நாஞ்சில் சம்பத் ஆதரவு.. என்ன நடக்குது சசிகலா அணியில்?

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தமிழகத்தில் மீண்டும் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும் என்றும் மக்கள் யாருக்காக வாக்கு அளித்தார்களோ அவர் இன்று இல்லை என்பதால் அதுவே சரியான முடிவாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு சசிகலா ஆதரவாளரும், தமிழக அமைச்சருமா&#

ராகவா லாரன்ஸ், தனுஷூடன் இணைந்த ஆர்யா

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் நடிகரான ஆர்யா நடித்த படங்கள் கடந்த சில ஆண்டுகளாக வெற்றிக்கனியை பறிக்காத நிலையில் அவர் மிகவும் நம்பியிருக்கும் படம் 'கடம்பன்'.