அதிபரையே வசைமாறிப் பொழியும் ஜோ பிடன்: அமெரிக்க அரசியல் நடக்கும் பரபரப்பு நிகழ்வுகள்!!!

 

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை விட தீவிரமாக அரசியல் பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. காரணம் வருகிற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற விருக்கிறது. இதில் ஜனநயாகக் கட்சி சார்பில் போட்டியிட இருக்கும் முன்னாள் அமெரிக்க துணை அதிபர், தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அதாவது “என்னைப் பொறுத்தவரையில் முதல் இனவெறிப் பிடித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்தான்” என வெளிப்படையான குற்றச்சாட்டை வைத்து இருக்கிறார். இதனால் அமெரிக்காவில் கடும் பதட்டம் ஏற்பட்டு இருக்கிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு இடையே அதிபர் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். அதில் காணொலி வாயிலான பிரச்சாரங்களும் பல நேரங்களில் நடைபெறுகிறது. அதைப் போலவே குடியரசு கட்சி வேட்பாளரான ஜோ பிடனும் அதிபருக்கு எதிராகக் கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். நேற்று தொழிலாளர்களிடையே நடைபெற்ற ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் ஜோ பிடன் அமெரிக்க அதிபர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து இருக்கிறார்.

“என்னைப் பொறுத்த வரையில் அதிபர் ட்ரம்ப் அமெரிக்க மக்களிடையே இனவெறியைப் பரப்புகிறார். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அவர்கள் சார்ந்திருக்கும் நாடு என்ன என்பதைக் குறித்து அவ்வபோது கருத்துத் தெரிவிக்கிறார். இதுவரை இருந்த எந்த அமெரிக்க அதிபர்களும் இதுபோன்று மக்களை இனவெறியுடன் நடத்தியதில்லை. ஒருபோதும் எந்த அமெரிக்க அதிபரும் இதுபோன்ற மக்களை பாகுபடுத்திப் பார்த்ததும் இல்லை. அதிபர் ட்ரம்ப் சார்ந்திருக்கும் குடியரசு கட்சியிலிருந்து வந்த அதிபர்கள்கூட இதற்கு முன் மக்களை இனவெறியுடன் நடத்தியது இல்லை. ஜனநாயகக் கட்சியில் இருந்து வந்த எந்த அதிபரும் இதுவரை அமெரிக்காவில் வாழும் மக்களை இனவெறியுடன் நடத்தியது இல்லை.

இனவெறி பிடித்தவர்கள் பலர் அதிபராக முயற்சி செய்தார்கள். ஆனால் இனவெறி பிடித்தவர்களில் முதல் முறையாக அதிபரானவர் ட்ரம்ப் மட்டும்தான். கொரோனா வைரஸை தவறான வகையில் கையாண்டு நேர்ந்த விளைவுகளை மறைக்கவே மக்களிடம் இனவெறியைப் பரப்பி அதிபர் ட்ரம்ப் மக்களை திசை திருப்புகிறார். நான் அதிகராக தேர்ந்தெடுக்கப் பட்டால் முதல் 100 நாட்களில் இனவெறியை நீக்குவதற்கான தீர்க்கமான நடவடிக்கை எடுப்பேன்’‘ எனத் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றி இருக்கிறார் ஜோ பிடன்.