தமிழை அடுத்து இந்தியிலும் ரீமேக் ஆகும் சூப்பர்ஹிட் மலையாள திரைப்படம்!

  • IndiaGlitz, [Tuesday,May 26 2020]

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான அய்யப்பனும் கோஷியும்’ என்ற மலையாளத் திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்ததே. பிரிதிவிராஜ் மற்றும் பிஜூ மேனன் நடித்திருந்த இந்த திரைப்படத்தின் பட்ஜெட் வெறும் 5 கோடி தான். ஆனால் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடதக்கது.

இதையடுத்து இந்த படத்தை பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்ய போட்டா போட்டி நடந்தது என்பதும் தமிழில் இந்த படத்தின் ரீமேக்கில் சசிகுமார் மற்றும் ஆர்யா நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அவரே ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்றும் இன்னொரு முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் மற்ற மொழி ரீமேக் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்தடுத்து அதன் செய்திகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

2000ஐ தாண்டிய ராயபுரம், 1000ஐ நெருங்கும் இன்னொரு மண்டலம்: சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி கொண்டே வருகிறது.

நயன்தாராவிடம் உள்ள பெஸ்ட் குணம்: டிடி வெளியிட்ட ரகசியம்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்து வருகிறது.

கொரோனா வறுமையால் பிச்சை எடுத்த இளம்பெண்ணை திருமணம் செய்த நபர்!

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பலர் தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்து சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தந்தை ஆபாச படம் பார்த்ததால் கொலைகாரனாகிய 14 வயது மகன்: அதிர்ச்சி தகவல்

தந்தை ஆபாச படம் பார்த்ததால் அவரது 14 வயது மகன் 9 வயது சிறுமி ஒருவரை கொலை செய்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பாராட்டுகளை குவித்து வரும் ஒரு பெண் அதிபர்!!! யார் தெரியுமா???

உலக நாடுகளில் தலைமை வகிக்கும் பெண் அதிபர்கள் கொரோனா பரவலை மிக நேர்த்தியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் கையாண்டனர் என்ற பாராட்டு மழை குவிந்து வருகிறது.