ஜான் கோகைன் - பூஜா தம்பதிக்கு பிறந்த குழந்தை.. பெயர் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,April 29 2023]

அஜித் நடித்த ’துணிவு’, பா. ரஞ்சித் இயக்கிய ’சார்பாட்டா பரம்பரை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ஜான் கோகைன் மனைவி பூஜா ராமச்சந்திரனுக்கு இன்று குழந்தை பிறந்துள்ள நிலையில் அந்த குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்து பெயரையும் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவர் ஜான் கோகைன் என்பதும் அவர் தற்போது பிசியாக தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி பூஜா ராமச்சந்திரன் ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் சமீபத்தில் இவர் கர்ப்பமான போது பல போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கர்ப்பமான நேரத்தில் பிகினி உடையில் இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவை பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சற்றுமுன் பூஜா ராமச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் தங்கள் குழந்தையை இந்த உலகிற்கு வரவேற்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது குழந்தையின் பெயர் கியான் கோகைன் என்றும் அவர் பதிவு செய்துள்ளதோடு தனது குழந்தைக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறியுள்ளார். குழந்தையின் கையுடன் ஜான் கோகைன் - பூஜா தம்பதியினர் கைகள் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

More News

கணவர், மகளுடன் 'PS 2' படம் பார்த்த ஐஸ்வர்யா ராய்.. வேற யாரெல்லாம் இருக்காங்க பாருங்க.. க்யூட் புகைப்படங்கள்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டை குவித்து வருகிறது என்பதும் முதல் பாகத்தை விட இரண்டாம்

'எனக்கு மூணு மாசம் வீட்ல தங்க வச்சு சாப்பாடு போட்டது இவர் தான்.. 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் புகழ் நெகிழ்ச்சி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இன்று இரண்டு வைல்ட் கார்டு  போட்டியாளர்கள் அறிமுகம் ஆகியிருக்கும் நிலையில் அவர்களில் ஒருவரை கட்டி பிடித்துக் கொண்ட புகழ்,

உலக பைக் டூரின்போது திரையுலக பிரபலத்தையும் அழைத்து சென்ற அஜித்.. இதுதான் காரணமா?

அஜித் தற்போது உலக பைக் டூரில் இருக்கிறார் என்பதும் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேபாளில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது என்பதையும் பார்த்தோம். 

ஒருவழியாக வருகிறது 'ஏகே 62' அப்டேட்.. அஜித் ரசிகர்கள் குஷி..!

அஜித் நடிக்க இருக்கும் 'ஏகே 62' என்ற படத்தின் அப்டேட் அவருடைய பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன. 

அப்ப நான் 9வது தான் படிச்சுக்கிட்டு இருந்தேன்.. அஜித்துடன் முதல் பட அனுபவம் குறித்து பேசிய நடிகை..!

அஜித் நடித்த முதல் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சங்கவி என்பதும் அதன் பிறகு அவர் பல விஜய் படங்களில் நடித்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் 'அமராவதி' திரைப்படம் அஜித்தின்