டிரம்ப்பை கொலை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஜானி டெப்

  • IndiaGlitz, [Friday,June 23 2017]

சமீபத்தில் உலகம் முழுவதும் வெளிவந்து சக்கை போடு போட்ட ஹாலிவுட் படம் 'பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்'. இந்த படத்தின் நாயகன் ஜானி டெப் அவர்கள் கிளாஸ்டன்பரி என்ற திருவிழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் 'ஒரு அதிபரை ஒரு நடிகர் கொலை செய்து நீண்ட காலம் ஆகிவிட்டது. மீண்டும் ஒருமுறை அதிபரை கொலை செய்யும் நேரம் வந்துவிட்டது' என்று பேசினார். இந்த பேச்சினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 1865ஆம் ஆண்டு அன்றைய அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கனை ஜான் வில்க்ஸ் பூத் என்ற நடிகர் கொலை செய்தார். அதேபோல் தற்போது அமெரிக்க அதிபராக இருந்து வரும் டொனால்ட் டிரம்பை பெரும்பாலான ஹாலிவுட் நடிகர்கள் எதிர்த்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஆஸ்கார் விழாவில் கூட டிரம்ப் நடிகர்களால் கிண்டலடிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அதிபர் டிரம்பை கொலை செய்ய வேண்டும் என்ற தொனியில் ஜான் டெப் பேசியதை அந்த விழாவில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

செளந்தர்யா ரஜினி-அஸ்வின் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் செளந்த்ர்யா ரஜினி-அஸ்வின் தம்பதிகள் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிய கடந்த ஆண்டு முடிவு செய்தனர்.

விவாகரத்து வழக்கு: செளந்தர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளையமகளும், இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் அஸ்வினை விவாகரத்து செய்வது குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

மொட்டை ராஜேந்திரனுக்கு ஜோடியாகும் 'சமையல் மந்திர' நடிகை

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'சமையல் மந்திரம்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திவ்யாவை தெரியாத இளைஞர்கள் இருக்க முடியாது.

விஜய்க்கு 'மெர்சல்' படம் ஒரு வைரமகுடம். ஹேமாருக்மணி

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் இரண்டு லுக்குகள் வெளியாகி விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களாலும் வரவேற்கப்பட்ட நிலையில் இந்த படம் குறித்தும், விஜய் குறித்தும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமாருக்மணி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்

31 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.விசி-38 ராக்கெட். இஸ்ரோ சாதனை

இஸ்ரோ நிறுவனம் தயாரித்த பி.எஸ்.எல்.விசி-38 ராக்கெட், 31 செயற்கைகோள்களுடன் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாரத பிரதமர் நரேந்திரமோடி உள்பட தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.