close
Choose your channels

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்

Friday, August 9, 2019 • தமிழ் Comments

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'பட்டாஸ்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'அசுரன்' திரைப்படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ஒன்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் என்பவர் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

கடந்த 1995ஆம் ஆண்டில் இருந்து மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz