close
Choose your channels

வித்தியாசமான வில்லனாக மாறிய 'ஜோக்கர்' நடிகர்

Wednesday, September 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான 'ஜோக்கர்' திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் ஆதரவை பெற்று மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதை அனைவரும் அறிவோம். குறிப்பாக இந்த படத்தில் மிக அபாரமாக நடித்து அனனவரின் பாராட்டுக்களை பெற்றவர் குருசோமசுந்தரம்.
இந்நிலையில் குருசோமசுந்தரம் தற்போது கிருஷ்ணா நடித்து வரும் 'யாக்கை' படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் படங்களில் வரும் சராசரி அதிரடி மிரட்டல் வில்லனாக இல்லாமல் முற்றிலும் வித்தியாசமான வில்லன் கேரக்டரில் சோமசுந்தரம் நடித்துள்ளதாகவும், இந்த கேரக்டர் மூலம் மீண்டும் ரசிகர்களிடத்தில் அவருக்கு பாராட்டுக்கள் கிடைக்கும் என தான் நம்புவதாகவும், இந்த படத்தின் இயக்குனர் குழந்தை வேலப்பன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணா, ஸ்வாதி ரெட்டி, பிரகாஷ்ராஜ், ராதாரவி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரிம் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.