close
Choose your channels

கவுதம் மேனன் பிறந்த நாளில் ஒரு ரொமான்ஸ் அறிவிப்பு

Tuesday, February 25, 2020 • தமிழ் Comments

பிரபல இயக்குனர் கவுதம் மேனனின் பிறந்த நாளை இன்று தமிழ் திரையுலகமே கொண்டாடி வருகிறது. அவருக்கு திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்றான’ ஜோஷ்வா இமைபோல் காக்க’ என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு ரொமான்ஸ் பாடலில் 33 வினாடி வீடியோ ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த பாடலின் முழு வடிவம் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வருண், ராஹே முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருப்பதாக தெரிகிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz