சீமானை தேடி எல்லோரும் வருவாங்க… ஆருடம் சொல்லும் டிங் டாங் சோதிடர்!

  • IndiaGlitz, [Monday,August 02 2021]

தமிழக அரசியலில் 3 ஆவது பெரும் தலைவராக உருவெடுத்து இருக்கும் திரு.சீமான் குறித்து நாடி ஜோதிடர் பாபு அவர்கள் ஒரு வியக்க வைக்கும் தகவலை கூறியிருக்கிறார். அதாவது அரசியலில் தனித்து செயல்படும் சீமானைத் தேடி எதிர்காலத்தில் பலரும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக அவர் உருவெடுப்பார் என்பது போன்ற கணிப்புகளை ஜோதிடர் பாபு அவர்கள் கூறி இருக்கிறார்.

வித்தியாசமான ஒலிகளை எழுப்பி அதன் மூலம் ஆருடம் சொல்லிவரும் நாடி ஜோதிடர் பாபு குறித்த வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் சமீபகாலமாக வைரலாகி வருகின்றன. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து ஜோதிடர் பாபு சில முக்கியமான தகவல்களைக் கணித்துள்ளார். அதிலும் குறிப்பாக தமிழக அரசியலில் சீமானின் பங்கு எப்படி இருக்கும்? என்பதும் குறித்தும் புலிப்படை தலைவர் பிரபாகரனுக்கும் சீமானுக்கு இடையே நடந்த சந்திப்பு குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் வருங்காலங்களில் தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன? இந்திய எல்லையில் நடக்க போகும் மாற்றங்கள், இலங்கை அரசியலில் நடக்கப்போகும் மாற்றங்கள் எனப் பல விஷயங்களைப் பற்றி அவர் ஆருடம் கூறியிருக்கிறார்.

கொரோனா பாதிப்பால் நிலைக்குலைந்துபோன பொருளாதாரம், அன்றாடம் வாழ்வியல் எனத் தொடர்ந்து நெருக்கடியைச் சந்தித்து வருகிறோம். இந்நிலையில் ஜோதிடர் பாபு அவர்கள் அரசியலைப் பற்றியும், இந்திய எல்லைப் பகுதியில் நிகழ இருக்கும் ஆபத்துகள் குறித்தும் கணித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

More News

டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கம் வென்ற வீராங்கனை? மலைக்க வைக்கும் ஆச்சர்யம்!

2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டிகள் சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாமல் தற்போது ஜப்பானில் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து 2 ஒலிம்பிக் பதக்கம்… சாதனை படிகளில் பி.வி.சிந்து!

8 வயதில் பேட்மிண்டன் விளையாட துவங்கிய பி.வி.சிந்து வெறும் 26 வயதிலேயே, ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து இருமுறை பதக்கம் வென்றுள்ளார்.

முக்கிய காட்சியை கட் செய்துவிட்டார்கள்: 'அடுத்த சாட்டை' படம் குறித்து நடிகை கன்னிகா ரவி

திருமணத்திற்கு முன்னர் நடிகை கன்னிகா ரவி நமக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் நடித்த படம் ஒன்றின் காட்சிகளை நடித்துக் காண்பித்துள்ளார்.

திருமணம் முடிந்த மறுநாளே சினேகனுக்கு நிகழ்ந்த நிகழ்வு: திருப்பம் என்பது இதுதானோ?

திருமணம் முடிந்த மறுநாளே தனக்கு நிகழ்ந்த நிகழ்வு குறித்து குறிப்பிட்டுள்ள கவிஞர் சினேகன் 'திருமணம் நடந்தால் திருப்பம் ஏற்படும் என்பது இதுதானோ' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

ரஷ்யாவில் 'வலிமை', 'பீஸ்ட்' படப்பிடிப்பு: அஜித், விஜய் சந்திப்பு நடக்குமா?

அஜித் நடிப்பில்,  எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக