வன்முறை என்னைக்குமே இன்னொரு வன்முறையை தான் கொடுக்கும்: 'உடன்பிறப்பே' டிரைலர்!

  • IndiaGlitz, [Monday,October 04 2021]

நடிகை ஜோதிகாவின் 50-வது திரைப்படமான ‘உடன்பிறப்பே’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த டிரைலர் வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிகா நடித்த 50-வது திரைப்படமான ‘உடன்பிறப்பே’ என்ற திரைப்படம் அமேசான் ஓடிடி பிளாட்பாரத்தில் அக்டோபர் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் அந்த வகையில் சற்று முன்னர் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமுத்திரக்கனி, ஜோதிகா, சசிகுமார் நடித்த இந்தப்படத்தை இரா சரவணன் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாசமலர், கிழக்குச்சீமையிலே படத்திற்கு பிறகு வரும் நெகிழ்ச்சியான அண்ணன் தங்கை கதை என்றும் ஜோதிகாவின் சகோதரர் சசிகுமார் செய்யும் வீரமான ஒரு சில நடவடிக்கைகளால் அவரது குடும்பம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் டிரெய்லரில் இருந்து தெரிய வருகிறது.

குறிப்பாக வன்முறை என்றைக்குமே தீர்வை கொடுக்காது, அது இன்னொரு முறை வன்முறையைதான் கொடுக்கும், இது புரியாமல் நீங்கள் செய்யும் பாவத்தை எல்லாம் என் பிள்ளைகள் மேலே இறக்குறீங்களே என்ற சமுத்திரகனியின் வசனம் இந்த படத்தின் கதையின் ஒன்லைனாக பார்க்கப்படுகிறது.

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய ‘ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படமும் அதே போன்ற ஒரு மாபெரும் வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மாலத்தீவில் பீச்பேபியாக மாறிய வித்யூராமன்: வைரல் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகையான வித்யூலேகா ராமன் சமீபத்தில் சஞ்சய் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேனிலவுக்காக

நயன்தாராவின் அடுத்த படத்தில் கவின்?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படத்தில் கவின் நடிக்க உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்பவே கல்யாணம் கட்டணும்… அழுது அடம் பிடிக்கும் சிறுவனின் க்யூட் வீடியோ வைரல்!

திருமணத்தை நினைத்து 20K கிட்ஸ்கள் மட்டும்தான் பயப்படாமல் சுற்றித் திரிகின்றனர்.

பாலியல் வழக்கில் சாகும்வரை ஜெயில்…. தீர்ப்பை வரவேற்ற தமிழ் நடிகை!

14 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேருக்கு மரணம்வரை ஆயுள் தண்டனை விதித்து

ராஜூ ஜெயமோகன் கூறிய கதை: அலறியடித்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று 18 போட்டியாளர்களை அறிமுக நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இன்று 2-வது நாளில் போட்டியாளர்கள் சுவராசியமாக கதை பேசிக் கொண்டிருக்கிறார்கள்